முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து தனி ஈழத்தை உருவாக்கும் நோக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமானது பிரிவினைவாதத்திற்கான அடித்தளமாகும். தமிழ் பேசும் முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து தனி ஈழ நாட்டினை உருவாக்கும் நோக்கியிலேயே சம்பந்தன் கூட்டணி செயற்படுகின்றது என்று தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை நீக்கி அரசாங்கத்திற்கேற்றால் போல் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அந்த ஒன்றியம் குறிப்பிட்டது. செளசிறிபாயவில் நேற்று தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவ் ஒன்றியம் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தது.
13ஆவது திருத்தச் சட்டமானது நீதிக்கு முரணானதாகவே காணப்படுகின்றது. இதன் மூலம் மக்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படும் என மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். எனவே நவம்பரில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டின் பின்னர் மக்கள் தீர்ப்பொன்றின் மூலமாக 13ஆவது திருத்தத்திற்கான நடவடிக்கையொன்றினை எடுக்க வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சர்வதேச சக்திகளின் உதவியோடு பிரிவினையினை ஏற்படுத்த முயல்கின்றது. ஒரு புறம் நவநீதம்பிள்ளையின் ஆதரவும் மறு புறத்தில் புலம்பெயர் தமிழர்களினது பண பலமும் சர்வதேச நாடுகளின் தலையீட்டினையும் கொண்டே தமக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தினை கூட்டமைப்பினர் உருவாக்கியுள்ளனர்.
எனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதற்கான சிறந்த நடவடிக்கையினை எடுக்கவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டு வரப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தினை இரத்து செய்து அரசாங்கத்தின் பலத்தினை நிரூபிக்க வேண்டும். vi

Post a Comment