Header Ads



அலரி மாளிகைக்குள் இரகசியமாக நுழைந்த முயன்ற இஸ்ரேலியர் கைது

(அபூ முஸ்னா)

இஸ்ரேலிய பிரஜை ஒருவர் கொள்ளுப்பிட்டி லிபர்டி சுற்றுவட்டத்தின் ஊடாக அலரி மாளிகை வளவுக்குள் இரகசியமான முறையில் நுழைய முற்பட்ட பின்னர்  அங்கிருந்து தப்பிச் செல்லும் போது கொள்ளுப்பிட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவ்வாறு இந்த இஸ்ரேலிய பிரஜையை ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் நிறுத்தி சோதனையிட்ட சமயம் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிசாரும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரும் இணைந்து சந்தேக நபரை பின்தொடர்ந்து சென்று கொள்ளுப்பிட்டி நகரில் வைத்து கைது செய்துள்ளனர். குறித்த இஸ்ரேலிய பிரஜை கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னரே இலங்கைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் தான் தலைமுடியை வெட்டுவதற்காக இடமொன்றைத் தேடிக் கொண்டு தவறுதலாக அந்த இடத்திற்கருகில் வந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரின் நடவடிக்கைக்கு அமைய அவர் ஓர் உளவாளியாக இருக்கலாம் எனவும், உளவு பார்ப்பதற்கே அந்த இடத்திற்கு வந்திருக்கலாம் எனவும் பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர் தொடர்பில் லேதிக தகவல்களைப் பெரும் பொருட்டு அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

2 comments:

  1. Eneemal appodan unkalukku

    ReplyDelete
  2. If you want Sri Lanka within peaceful, Don'l allow Israelis in to Sri Lanka.

    ReplyDelete

Powered by Blogger.