இஸ்லாத்தின் மீதான வெளிப்படையான தாக்குதல் என விமர்சனம்
பிரெஞ்சு அரசு பள்ளிகளில் புதிய " மதச்சார்பின்மை பிரகடனம்" ஒன்று கட்டாயமாக எல்லோருக்கும் தெரியும் வண்ணம் இன்றிலிருந்து வைக்கப்படவேண்டும் என்று பிரான்ஸின் கல்வி அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
பள்ளியின் கல்வித்திட்டத்தை மதக் காரணங்கள் காட்டி மாணவர்கள் ஆட்சேபிக்க முடியாது என்பதை அவர்களுக்கு நினைவூட்டவே இந்தப் பிரகடனம் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த புதிய பிரகடனத்தில் 15 ஷரத்துக்கள் இருக்கின்றன. முதல் பிரகடனம் பிரெஞ்சுக் குடியரசு ஒரு பிரிக்கமுடியாத, ஜனநாயக, சமூக, மதச்சார்பற்ற நாடு என்று கூறுகிறது.
பாடத்திட்டத்தில் சில பகுதிகளை ஆசிரியர் நடத்துவதை மாணவர்கள் தங்களது மத மற்றும் அரசியல் கொள்கைகளைப் பயன்படுத்தி ஆட்சேபிக்க முடியாது என்று மற்றுமொரு ஷரத்து கூறுகிறது.
இந்தப் பிரகடனம் இஸ்லாத்தின் மீதான ஒரு ஏறக்குறைய வெளிப்படையான தாக்குதல் என்று சிலர் விமர்சித்திருக்கின்றனர். BBC

Post a Comment