Header Ads



இலங்கை தலைவர்களுக்கு அமெரிக்கா புற்றுநோயை ஏற்படுத்தலாம் - வைத்திய நிபுணர் வசந்த


அமெரிக்காவுக்கு எதிராக நாடுகளின் தலைவர்களுக்கு சூட்டுசுமான முறையில் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயகரமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக  மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின்  பிரதிப்பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர்  வசந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையில் இலங்கையின் அரச தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அமெரிக்காவுக்கோ, வேறு வெளிநாட்டுக்கோ செல்லும் போது புற்றுநோய் உடலில் தொற்றுவதை தடுக்கவும் அதில் இருந்து தப்பித்து கொள்ளவும் கட்டாயம் பாதுகாப்பு நடைமுறைகளை கையாள்வது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார். 
அரச தலைவர்களோ, முக்கியஸ்தர்களோ, வெளிநாடு செல்லும் நிலையில்,  அவர்களுக்கு வழங்கப்படும் வரவேற்பின் போது புற்றுநோய் கிருமிகளை உடலில் செலுத்த முடியும்.  விருந்தினர்களை வரவேற்கும் போது, கட்டி கழுவுதல்,  கைகொடுத்தல் போன்ற சந்தர்ப்பங்களில் இது நடைபெறக் கூடும்.
அத்துடன் பயணங்களை மேற்கொள்ளும் போதும், தங்கிருக்கும் இடங்களிலும் இவ்வாறு இந்த புற்றுநோய் கிருமிகளை அல்லது பற்றீரியாக்களை உடலில் தொற்றவைக்க முடியும். இதனால் கையுறைகள் அணிவது உட்பட பாதுகாப்பு முறைகளை பயன்படுத்;;துவதன் மூலம் இதனை தவிர்த்து கொள்ள முடியும்.
அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளில் தமக்கு தேவையான நபருக்கு புற்றுநோய் வைரசை ஒன்றை உடலில் தொற்றவைக்க முடியும். இதனால் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது அவசியம் எனவும் மருத்துவர் வசந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுத்த சில அரச தலைவர்கள் மற்றும் பிரசித்தமான நபர்கள் புற்றுநோயினால் இறந்து போயினர், இந்த மரணங்களுக்கு இந்த சூட்டுசுமான திட்டம் காரணமாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

No comments

Powered by Blogger.