Header Ads



காத்தான்குடியில் பெண்களுக்கான இஜ்திமா (படங்கள்)


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி இஸ்லாமிய தஃவா சென்றரினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான இஜ்திமா நிகழ்வு 21-09-2013 சனிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயலில் மௌலவி அஸ்பர் ஹஸன்(பலாஹி) தலைமையில் இடம்பெற்றது.

அஸர் தொழுகை தொடக்கம் மாலை 06.00 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் 'பெருகி வரும் தீமைகளும் காத்துக்கொள்ளும் வழிகளும்' எனும் தலைப்பில் மருதமுனை தாறுல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம்.முபாறக்(மதனி) , 'ஆரோக்கிய வாழ்வும் இஸ்லாம் கூறும் நோய் நிவாரண முறைகளும்' எனும் தலைப்பில் கல்முனை தள வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

காத்தான்குடி இஸ்லாமிய தஃவா சென்றரினால் ஏற்பாட்டிலும் மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயலின் ஒருங்கமைப்பிலும் இடம்பெற்ற இவ் இஜ்திமா நிகழ்வில் 800க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டனர். இதன்போது சுத்தம்,சுகாதாரம் தொடர்பில் பெண்களுக்கு முழுமையான விளக்கமளிக்கப்பட்டதுடன் பாவங்கள் தொடர்பிலும் விழிப்புணர்வுகள் அளிக்கப்பட்டன.

1 comment:

  1. muslim pengalin pukaippadangali pirasurikka vendam ....

    ReplyDelete

Powered by Blogger.