Header Ads



இம்முறை தேர்தலில் முதல் முறையாக உட்புறம் தெரியும் வகையிலான வாக்குப் பெட்டி

இம்முறை மாகாண சபைத் தேர்தலில் முதல் முறையாக உட்புறம் தெரியும் வகையிலான வாக்குப் பெட்டிகளை பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது.

தேர்தல் இடம்பெறவுள்ள வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கு உட்பட்ட சகல மாவட்டங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளில் இந்த வாக்குப் பெட்டிகளை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளா்ர.

இந்த நடவடிக்கை உத்தேச திட்டமாக முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு பாதுகாப்பான பிளாஸ்ரிக் வாக்குப் பெட்டிகளை இந்தியாவிலிருந்து தருவித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார். Nf
 

1 comment:

Powered by Blogger.