Header Ads



விசேட தேவையுடய சிறுவர்களை அடையாளங்கானல்

(அனா)

விசேட தேவையுடய சிறுவர்களை அடையாளங்கானல் மற்றும் அச் சிறுவர்களை அபிவிருத்தி செய்தல் தொடர்பான விழிப்பணர்வு வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்று வருகின்றது.

இதற்கமைய (26.09.2013) வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச செயலக சமூக பராமரிப்பு நிலையத்தில் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.நஜீம் தலைமையில்  விழிப்புணர்வுக் கருத்தரங்கு இடம் பெற்றது.

வளவாளர்களாக டாக்டர் எம்.ஏ.சி.எம்.பரக்கத்துல்லாஹ் மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலக ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ்.ஹாணுக்கிருஸ்ணா ஆகியோர் கலந்து கொண்டதுடன் பயனாளிகளாக முன்பள்ளி; ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.