காத்தான்குடி சன் றைஸஸ் அணி வெற்றி
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
பொலன்னறுவையில் முப்படைகளின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட உதைப்பந்தாட்டப் போட்டி 01-09-2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கு பொலன்னறுவை பொது விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
கதுறுவெல உதைப்பந்தாட்ட பொலிஸ் அணியினருக்கும் காத்தான்குடி சன் றைஸஸ் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் இடம்பெற்ற சிநேகபூர்வ உதைப்பந்தாட்டப் போட்டியில் காத்தான்குடி சன் றைஸஸ் விளையாட்டுக் கழகம் 3-1 என்ற வித்தியாசத்தில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இதில் காத்தான்குடி சன் றைஸஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் எம்.எம்.ஸாஹிர்,முகாமையாளர் டீன் பைறூஸ் ஜேபி,ஆலோசகர்களான ரஹீம் ஜேபி,அஸ்பர் ஜேபி,கதுறுவல பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள்,இரானுவத்தினர்,முப்படை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். கிழக்கில் உதைப்பந்தாட்டத்தில் காத்தான்குடி சன் றைஸஸ் விளையாட்டுக் கழகம் பல்வேறு போட்டிகளில் பெற்று தொடர்ந்தும் ஜாம்பவானாக ஜொலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment