அரசாங்கத்தை விமர்சிப்பதால் முஸ்லிம் சமுகம் எதனையும் சாதித்துவிட முடியாது - ஹரீஸ்
(யு.எம்.இஸ்ஹாக்)
அரசாங்கத்தை விமர்சிப்பதன் மூலமோ அல்லது எதிர்கட்சியில் அமர்வதன் மூலமோ முஸ்லிம் சமுகம் எதனையும் சாதித்து விட முடியாது. இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி மகிந்த தலைமையிலான அரசாங்கம் மிகப் பலமாக உள்ளதென திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார் .
மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் ஐயாயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்தின் கீழ்புனர் நிர்மாணம் செய்யப்பட்ட கல்முனை கல்விவலயதுக்குட்பட்ட நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய கையளிப்பு விழாவும் கணணி ஆய்வு கூடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது கல்லூரி அதிபர் திருமதி ஜே.ஹாரிஸ் தலைமையில் நடை பெற்ற இவ்வவைபவத்தில் பிரதம அதிதியாக திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு பேசினார் அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
ஒருகாலத்தில் ஆயுதங்களை நம்பியிருந்த வடபகுதி தமிழ் மக்கள் இன்று அபிவிருத்திக்கு அடிதளமிட்டுள்ளனர். இந்த அடித்தளத்தை இடுவதற்கு தமிழ் தலைவர்களும் பொது மக்களும் புத்தி ஜீவிகளுமாக பல்லாயிரக் கணக்கான உயிர்கள் பறி போயுள்ளன இந்த இழப்புக்களை தவிர்பதற்கான வியயூகத்தை மறைந்த மாபெரும் தலைவர் அஸ்ரப் அன்று நன்கு திட்டமிட்டு வகுத்து முஸ்லிம் இளைஞ்சர்களை ஆயுதம் ஏந்தாமல் தடுத்து பல்லாயிரக் கணக்கான உயிர்களை பாதுகாத்தார்.. அதற்காக காலமெல்லாம் எம் தலைவர் மர்ஹூம் அஷ்ரபை முஸ்லிம் சமுகம் நன்றிடன் நினைவு கூற வேண்டும்.
அண்மையில் தேர்தல் பிரசாரத்துக்கு வட பகுதிக்கு போன போது அங்குள்ள மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களை நேரில் கண்ட போது எமது தலைவர் மர்ஹூம் அஷ்ரப் எம்மை சரியான வழியில் நடத்தியுள்ளார் என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வடக்கில் இருந்து கிழக்கை பிரித்து கிழக்கு மாகாணத்தை ஆளுகின்ற பொறுப்பை முஸ்லிமானவர் ஒருவருக்கு வழங்கி அதனை நாம் அழகு பார்க்க வைத்தவர் எமது ஜனாதிபதியே ஆவார். இதன் மூலம் கிழக்கில் உள்ள முஸ்லிம் சமுகம் அனுபவித்து கொண்டிருகின்றோம் .
நடந்து முடிந்த வட மாகாண தேர்தல் முடிவுகள் தென் பகுதி அரசியலுக்கு அழுத்தத்தை கொடுத்துள்ளது சிறு பான்மை சமூகங்களுக்கு எதிராக செயல் பட்டுக்கொண்டிருக்கும் கடும் போக்கு இனவாதிகளுக்கும் ஒரு பாடத்தை புகட்டியுள்ளது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக செய்படுகின்றவர்களை அரசு தடுக்க வேண்டிய கட்டாய சூழலை இந்த தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கின்றன .
இந்த நாட்டின் வரலாற்றில் பலமான அரசு ஆட்சி செய்கின்ற போது அதன் மூலம் பல உதவிகளையும் பெற்று சிறுபான்மை சமுகம்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் வல்லமையும் நாம் பெற்றிருக்கின்றோம் என்றார்.
well, hereafter don't talk about our rights. if you need development, why you need SLMC. you can contest in major parties without spoiling name of the Islam.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete