Header Ads



நடுரோட்டில் நிர்வாண தியானம் செய்த மாணன்

சீனாவில் நடுரோட்டில் ரஷ்ய மாணவன் ஒருவன் நிர்வாணமாக தியானம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சீனாவின் ஹைனான் மாகாணத்தில் நேற்று போக்குவரத்து நெரிசல் மிக்க ஹைகோவ் நகரத்தில் ஹைதியான் ஆறாவது நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிக்னலுக்கு கீழே திடீரென மாணவர் ஒருவர் அமர்ந்து தியானம் செய்ய தொடங்கினார்.   அவரது இந்த செயலைக் கண்டு வாகன ஓட்டிகள் முதலில் ஆச்சரியமாக பார்த்து சென்றனர். ஆனால் படிப்படியாக அந்த மாணவர் தனது ஆடைகள் அனைத்தையும் அவிழ்த்து முழு நிர்வாணமாக அமர்ந்து தியானம் செய்வது போல் அமர்ந்திருந்தார். இதனைக் கண்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பெண்கள் முகத்தை சுளித்துக் கொண்டு சென்றனர். பொது மக்கள் அவரை எழுப்ப முயற்சி செய்தனர்.

எனது தியானத்தை கலைக்கிறாயா என ஆபாசமாக பேசி, தன்னை தொந்தரவு செய்தவர்களுடன் அந்த மாணவர் சண்டையிடத் தொடங்கினார். இதனையடுத்து சாலையில் செல் பவர்களிடம் ஆபாச சைகைக்காட்டி ரகளை யில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனடியாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை ஆடையை அணிய வலியுறுத்தினர். சீனாவில் பொது இடத்தில் நிர்வாணமாக இருப்பது சட்ட விரோத செயலாகும் என்று அறிவுறுத்தினர்.  ஆனால் மாணவர் மறுக்கவே அவரை குண்டுகட்டாக தூக்கி சென்று போலீஸ் வாகனத்தில் அடைத்தனர்.  விசாரணையில் ரஷ்யாவைச் சேர்ந்த லிமாக் என்பதும் பல்கலை கழகத்தில் படித்து வருவதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Powered by Blogger.