Header Ads



'ஹிஜாப்' அணிந்த பெண்ணை பணி நீக்கியது தவறு - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்காவில் ஹிஜாப் அணிந்த பெண்ணை பணி நீக்கியது தவறான செயல் என நாகரீக உடைகளை விற்கும் அவர்கொம்பு மற்றும் பிட்ச் என்ற நிறுவனத்திற்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிறுவனம் பாகுபாட்டு தடுப்பு சட்டத்தை மீறியிருப்பதாக அமெரிக்க மாவட்ட நீதிபதி கொன்சலஸ் ரொஜர்ஸ் குறிப்பிட்டுள்ளார். பிட்ச் நிறுவனத்தில் பணியாற்றிய ஹாஸி கான் தனது ஹிஜாப்பை அகற்ற மறுத்ததையடுத்து கடந்த 2010 ஆம் ஆண்டில் பணி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஹிஜாப் அணிவது தனது நிறுவன கொள்கைக்கு முரணானது என்ற அந்த நிறுவனத்தின் வாதத்தை நீதிபதி நிராகரித்தார். கானின் ஹிஜாபினால் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் பற்றி ஏற்கக் கூடிய எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என நீதிபதி குறிப்பிட்டார்.

இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நஷ்டஈடு நிர்ணயிக்கப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.