Header Ads



மட்டு -ஏறாவூர் முனையவளவு வீதி குன்றும் குழியுமாக..

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட ஏறாவூர் முனையவளவு வீதி நீண்ட நாட்களாக அபிவிருத்தி செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதால் அவ்வீதியினூடாக பயணிக்கும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஏறாவூர் முனையவளவு வீதியில் ஏறாவூர் பிரதான வீதியிலிருந்து வரும் போது இரு பள்ளிவாயல்கள்  அமையப் பெற்றுள்ளதுடன்  ஒரு பாலர் பாடசாலைக்கான வழியாகவும் அது பயன்படுத்தப்படுகிறது. இதனால் சின்னஞ்சிறார்கள்,பள்ளிவாயலுக்குச் செல்பவர்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

மழைகாலங்களில் வீதியில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பல சுகாதார சீர்கேடுகள் இடம்பெற வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே குறித்த வீதியை சம்பந்தப்பட்டஅதிகாரிகள் கவனமெடுத்து மிக விரைவில் அபிவிருத்தி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

No comments

Powered by Blogger.