சாய்ந்தமருதுவில் சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுக்கள் மீட்பு
(யு.எம்.இஸ்ஹாக்)
கல்முனை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சாய்ந்தமருது வீடொன்றில் இருந்து பெறுமதியான சட்ட விரோத வெளி நாட்டு சிகரட் வகைகளும் மற்றும் போதை வஸ்துக்களும் பொலிசாரினால் கைப்பற்றப் பட்டுள்ளது.
இந்த சம்பவம் 02-09-2013 திங்கட் கிழமை மாலை 4.00 மணிக்கு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருதில் இடம் பெற்றுள்ளது.
பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பிரதேசம் சுற்றி வளைக்கப் பட்டு குறித்த பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன . அண்ணளவாக ஒரு இலட்சம் பெறுமதியை கொண்ட சட்ட விரோத சிகரட் வகைகள் ,பல வகையான போதை பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளது .
கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோனின் உத்தரவுக்கமைய பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி வசந்த குமார தலைமையிலான பொலிஸ் குழுவினராலேயே இப்போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளது குறித்த பொருட்களை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப் பட்டு விசாரிக்கப் பட்டு வருகின்றார்.

Ippadiyana aatkalal namathu moththa samoohaththitkai avamanam, itha vittu ulaikira panam haram anru tharinthum, kasu kidaikumanra anna businessum saiya agkada samoohathil sila piravihal ready anhiratha, thodarum news hal solli kondirukkirana,Ulaippathatku Avvalavo Halalana valihal irukka yaanthan ivarhal ippadiyallam kurukku valihala naadippoahinrarhalo... Yaa allah ivarhalukku neethan nalla valiya kaatanum
ReplyDelete