Header Ads



மாணவிகளின் கழிவறையில் கமராவை பொருத்திய ஆசிரியர்

(Nf) தனியார் பகுதிநேர வகுப்பொன்றின் கழிவறையில் மிகவும் சூட்சுமமான முறையில் கமரா ஒன்றைப் பொருத்தி, மாணவிகளின் காட்சிகளை பதிவுசெய்த சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட தனியார் வகுப்பு ஆசிரியர் இம்மாதம் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரத்கம பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கைதுசெய்ய முற்பட்டபோது, அவர் தனது கையடக்கத் தொலைபேசியில் இருந்த காட்சிகள் அடங்கிய ஷிப்பை கடித்து நாசப்படுத்தியதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. SUBA ANAGATHAYAK....

    Where BALA SENA............?????

    ReplyDelete

Powered by Blogger.