Header Ads



சுகாதார அமைச்சின் ஆலோசனை

(எம்.எம்.ஏ.ஸமட்)

வைத்தியர்களின் மருந்துவச் சீட்டு இன்றி நுண்ணுயிர்களின்; வளர்ச்சியைத் தடுக்கும் 'அன்டிபயோடிக்' நுண்ணுயிரெதிர்ப்பு மருந்துப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டாமென நாட்டிலுள்ள ஏறக்குறைய 2887 பாமஸிகளுக்கும் சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

இது தொடர்பில், சுகாதார அமைச்சின் பல்கூட்டு மருந்துப் பொருட் பாவனையைத் தடுக்கும் பிரிவு மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்வாலோசனையை பாமஸி உரிமையாளர்களிடம் முன்வைத்துள்ளது.

உலகளாவிய ரீதியில் இயங்கி வரும் பல்தேசியக் கம்பனிகள் கடந்த சில தசாப்தங்களாக  உச்ச செலவில் 'அன்டிபயோடிக்' நுண்ணுயிரெதிர்ப்பு மருந்துப்பொருட்களை உற்பத்தி செய்துள்ளன. இவ்வுற்பத்திக்காக ஏறக்குறைய 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை  அவை செலவு செய்துள்ளன.
இருப்பினும். இவை இக்கம்பனிகளுக்கு இலாபத்தை ஈட்டிக்கொடுக்கவில்லை. இக்கம்பனிகள் தவிர்ந்த ஏனைய கம்பனிகள் எவ்வித செலவுமின்றி இவற்றை அறிமுப்படுத்தியுள்ளது.

அத்துடன், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அதிக அக்கறை செலுத்தி வருகின்றமை தெரிய வருவதாக அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும், மருத்துவர்களின் மருந்துச் சீட்டின்றி அன்டிபயோடிக்கை கொள்வனவு செய்யும் மக்கள் அவற்றை மருத்துவர்களின் ஆலோசiனை இன்றி நுகர்கின்றனர். இவை அதிக வலுக்கொண்டவையாக இருப்பதன் காரணமாக, நுண்ணுயிர்களுக்கெதிராக பிரபொருள் எதிரிகள் உடலினுள் உற்பத்தியாவதைத் தடுக்கின்றன.

இத்தகையவர்கள் நோய்த் தாக்கத்துக்குள்ளாகும்போது மருந்துகள் பயனளிக்காது இறப்பையும் சந்திக்க வைக்கிறது. இவற்றுக்குப் பிரதான ஏதுவாக அமைவது 'அன்டிபயோடிக்' மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனை இன்றி அருந்துவதாகுமென சுகாதார அமைச்சின் எம் டி ஆர் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றின் நிமித்தம, மருந்துப் பொருள் பாவனையிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்குடன் பாமஸி  உரிமைகயாளர்கள், மருந்தகங்களில் பணிபுரியும் மருந்துக்கலைவையாளர்கள் மற்றும் உதவியாளர்களை விழிப்பூட்டும் பொருட்டு சுகாதார அமைச்சு விஷேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.