பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விற்கு கௌரவிப்பு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி -ஜாமியதுல் பலாஹ் முஸ்லிம் அரபிக்கலாசாலையின் ஏற்பாட்டில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு ஜாமியதுல் பலாஹ்வின் உள்ளக மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜாமியதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் மௌலவி அப்துல்லாஹ் ரஹ்மாணியின் தலைமையில் இடம்பெற்ற இவ் கௌரவிப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எப்.எம்.சிப்லி பாறுக், நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் அஸ்பர் காத்தான்குடி காதி நீதிபதியும் ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவருமான மௌலவி அலியார் பலாஹி உள்ளிட்ட உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்;.
இதன் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் சமூக சேவையினை பாராட்டி அவர் முஸ்லிம் சமூகத்திற்காக வழங்கும் அர்ப்பணிப்புகளை பாராட்டி மௌலவி அப்துல்லாஹ் ரஹ்மாணியினால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு அவரோடு இணைந்து முஸ்லிம் சமூகத்திற்காக பணியாற்றி வரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எப்.எம்.சிப்லி பாறுக், நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் அஸ்பர் உள்ளிட்டோருக்கும் இந்த கௌரவம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Post a Comment