Header Ads



சமூக பிரச்சினைக்குரிய தீர்வும், பாதுகாப்பும் பெற அரசதரப்பில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அவசியம்

(இ. அம்மார்)

இனவாதக் கருத்துக்களைக் கூறி அரசியல் செய்வோரை முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டும். இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. பெரும்பான்மையினமாக வாழும் சிங்கள பௌத்தயின  மக்கள் மத்தியிலே நாங்கள் சிறு தொகையினராக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் எல்லாயின மக்களுடனும் ஒன்றுபட்டு வாழவேண்டும். எங்களால் ஆட்சியைப் பிடிக்கவோ ஆட்சி மாற்றம் செய்யவோ முடியாது. இந்நாட்டில் பலமான எதிர்கட்சி ஒன்று இல்லை. எனவே இந்த தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் வெற்றி பெறப் போவது என்பது நாம் அனைவருக்கும் தெட்டத் தெளிவாகத் தெரியும். இந்த சந்தர்ப்பத்தில் எமது மதிநுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்து கொள்ள வேண்டும்.  குருநாகல் மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் வெற்றி அரசாங்கம் சார்பாக முஸ்லிம் அரசியல் பிரதிநிதி தெரிவு செய்வதன் மூலம்தான்  தங்கியுள்ளது என்று பிரதி அமைச்சர் பைசர் முஸ்தாபா தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் பொதுசன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் சத்தாரை அதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது கலந்து கொண்ட பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா அங்கு இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

இன்று முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகள் இல்லை என்று கூற வரவில்லை. பிரச்சினை இருக்கின்றது. ஆனால் அந்தப் பிரச்சினைகளுக்குரிய தீர்வையும் பாதுகாப்பு உறுதிப்பாடடையும் பெற்றுக் கொள்வதாயின் அரச தரப்பில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அவசியமாகும். வெறுமனே இனவாதக் கருத்துக்களைப் பரப்வி சமூகத்தை ஏமாற்றி வாக்குகளை சுவீகரிக்கின்ற அரசியல் காலாசாரத்தை முஸ்லிம் மக்கள் நிராகரிக்க வேண்டும். குருநாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களுடைய தேவைப்பாடுகள் அதிகம். பாடசாலை அபிவிருத்தி , பாதை அபிவிருத்தி உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கின்றன.

சமூக நலனை முன்னிறுத்தி நாம் அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும். இந்தக் கருத்து வீட்டிலிருக்கின்ற பெண்கள் மத்தியிலும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.  குருநாகல் மாவட்ட முஸ்லிம்களுடைய அரசியல் எதிர்காலம் அப்துல் சத்தாரின் வெற்றி தோல்வியிலேயே தங்கியுள்ளது. அப்துல் சத்தாருக்கு வாக்களித்து வெற்றிபெச் செயதன் மூலமே முஸ்லிம்கள் அரசாஙக்தின் பக்கம் இருக்கின்றார்கள் என்பதை கவனத்திற்கொள்ளும். எனவே பல்லின சமூகத்திற்கு மத்தியில் வாழுகின்றவர்கள் என்ற வகையில் இன ஐக்கியத்தை வளர்க்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சத்தாலை வெற்றி பெறச் செய்தல் வேண்டும் என்று பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



1 comment:

  1. முஸ்லிம்கள் சிறுபான்மை மக்கள் என்பதற்காக ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை ஏற்றுக் கொண்டாலும், ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை ஏற்கனவே ஸ்ரீ.ல.மு.கா. தாபகத் தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களும், இன்றைய மு.கா. தலைவர் ஹக்கீமும் பேரினவாத அரசியல்வாதிகளுக்கு செய்து காட்டி உணர்த்தியும் உள்ளார்கள்.

    ஆனால் அதற்கான மூலதனமாகக் காணப்பட்ட 'முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைப் பலம்' இன்று கிடையாது. அவ்வளவுதான். முஸ்லிம் சமூகம் மீண்டும் ஒற்றுமைப்பட்டால் எம்மால் நிச்சயம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

    குருணாகல் மாவட்டத்தில் அரச தரப்பில் முஸ்லிம் பிரதிநிதி தெரிவு செய்யப்படுவதால் பொது பல சேனாக்களின் தொல்லைகள் இல்லாமலாகி முஸ்லிம்களின் வணக்கத்தலங்களும், கலாச்சார உரிமைகளும் முற்று முழுதாகப் பேணப்படும் என்பதற்கு அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் உத்தரவாதம் அளிக்க முடியுமா?

    இப்போதும் முஸ்லிம் சமூகத்திற்குப் பிரச்சினைகள் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் ஏன் இதுவரை அரசாங்கத்துடன் இணைந்திருந்த காலத்தில் அவற்றுக்கான தீர்வுகளைக் காண முயலவில்லை? இனிமேல்தான் வேட்பாளர் அப்துல் சத்தார் அவர்களை மாகாண சபைக்கு அனுப்பி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமா?

    இனவாதக் கருத்துக்களைப் பரப்புவோரை நிராகரிக்க வேண்டும் என மக்களிடம் கோரும் நீங்கள், உங்களின் அமைச்சரவையில் இருந்து கொண்டே இனவாதத்தைப் பகிரங்கமாகப் பேசும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என ஏன் குரல் எழுப்பாதுள்ளீர்கள்?

    வேட்பாளர் அப்துல் சத்தார் அழ்ழாஹ்வின் நாட்டப்படி தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ மரணித்து விட்டால் குருணாகல் மாவட்ட முஸ்லிம்களுக்கு அரசியல் எதிர்காலமே இல்லையா?

    வீட்டிலுள்ள முஸ்லிம் பெண்களுக்கு உங்களின் கருத்துக்கள் சென்றடைவதற்கு முன்னால் அவர்கள் ஹிஜாப், அபாயா அணிந்தவர்களாக வெளியில் சுதந்திரமாக நடமாடும் வழிகளை நீங்கள் ஏற்படுத்துங்கள்.

    வேட்பாளர் அப்துல் சத்தாருக்கு வாக்களிப்பதன் மூலம்தான் முஸ்லிம்கள் அரசாங்கத்தின் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இன்னும் ஒரு முறை உறுதிப்படுத்தத் தேவையில்லை. ஏற்கனவே முஸ்லிம் சமூகத்திற்கு இத்தனை அநியாயங்கள் நடந்தும் நீங்கள் எல்லோரும் அரசுடன் ஒட்டிக் கொண்டு இருப்பதன் மூலம் ஜனாதிபதிக்கும், அவரது சகோதர சகாக்களுக்கும் முஸ்லிம்கள் அரசுடன்தான் இருந்தார்கள் என்ற வரலாறு நன்கு தெரியும்.

    பல்லின சமூகத்திற்கு மத்தியில் முஸ்லிம்கள் இந்நாட்டில் பரந்து வாழ்வதால் இனஐக்கியத்தை நாம் வளர்க்க வேண்டும் என்ற உங்களின் கருத்தில் நான் 100 வீதம் உடன்படுகின்றேன்.

    அந்த வகையில் வட மாகாணத்தில் த.தே.கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் முன்னணி புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் இனஐக்கியத்தை வலியுறுத்தி ஒன்றிணைந்துள்ளது நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரியான நடவடிக்கையாகும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.