Header Ads



வடமாகாண மக்களுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி

(சத்தார் எம். ஜாவித்)

சுமார் 25 வருடங்களுக்குப்பின் பல்வேறுபட்ட சர்ச்சைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் மத்தியில் வடமாகாண சபை தேர்தல்  தற்போது ஒருவாறு நடந்து முடிந்துள்ளது. மேற்படித் தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்விக்குறியுடன் இருந்த வடமாகாண சபைத் தேர்தலானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளின் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புக்களுடன் நடந்து முடிந்தமையும் கூட வடமாகாண மக்களுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியாகவே கருதப்படுகின்றது.

வடமாகாணத்தைப் பொருத்வரையில் மேற்படித் தேர்தல் குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கு முதல் தேர்தலாகவும் மட்டுமல்லாது மேற்படித் தேர்தலின் பின்னரான வாக்களிப்பு வீதங்களை வடமாகாணத்தில் அவதானிக்கும் அது தேர்தலில் மக்கள் ஆர்வம் கொண்டுள்ள நிலைமைகளையே காட்டி நிற்கின்றன.

வடமாகாண மக்களைப் பொருத்தவரையில் கடந்த மூன்று தஸாப்த கால யுத்தத்தில் தவண்ட மக்கள் யுத்தம் காரணமாக பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்து அதில் சலிப்பும் கண்டவர்கள் அவர்களுக்கு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலானது ஒரு புதுமையான அனுபவத்தையே ஏற்படுத்தியுள்ளமையைக் குறிப்பிடலாம்.

மக்கள் வாக்களிப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளமையை ஒவ்வொரு மாவட்டங்களின் வாக்களிக்கப்பட்ட வீதங்களை பார்க்கும்போது அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மன்னாரில் 70 வீதமும், முல்லைத்தீவில் 71 வீதமும், யாழ்ப்பாணத்தில் 60 வீதமும், வவனியாவில் 65 வீதமும் கிளிநொச்சியில் 73 வீதமுமான மக்கள் வாக்களித்துள்ளனர்.

வடமாகாணத்தைப் பொருத்தவரையில் மேற்படி கணிப்பீடானது மக்கள் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கின்றனர் என்பது புலணாகின்றது. குறிப்பாக தாம் பட்ட துன்ப துயரங்களுக்க ஒரு விமோசனம் தேவை என்பதனை வெளிப்படுத்துவதாகவே மக்களின் வாக்களிப்பு ஆர்வம் காட்டி நிற்கின்றது.

இந்தவகையில் அரசாங்கம் மக்களின் உணர்வகளை புரிந்து கொண்டு அவர்களின் விருப்பு வெறுப்புகளை நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் அவர்களின் எதிர்கால வாழ்வு அமைவதற்கு தேவையான சகல வழிமுறைகளையும் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுப்பதே சாலச் சிறந்தது என புத்தி ஜீவகளும் கல்விமான்களும் தமது கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர்.

வடமாகாணத்தில் தேர்தல் நடைபெற்ற ஐந்து மாவட்டங்களில் வவுனியா மாவட்டத்ததை விட ஏனைய மாவட்டங்களைப் பொருத்தவரை கடந்தகால யுத்த சூழ்நிலையில் முற்றிலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும். பல்வேறுபட்ட இடம்பெயர்வுகளுக்கு மத்தியில் மக்கள் தத்தமது பிரதேசங்களில் தமது ஆட்சியாளர்களை தெரிவு செய்வதற்கான காரணம் நிம்மதி , சமாதானத்துடனான அபிவிருத்தி என்பது தான் தற்போது மக்களின் முதல் எதிர்பார்ப்பாகும்.

எனவே எந்தக் கட்சி வென்றாலும் தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவேண்டியதே வெற்றியின் இரகசியமாக அமையவேண்டும்.

இந்தவகையில் வெளியான முடிவுகளின்படி இலங்கை தமிழரசுக் கட்சி வடமாகாணத்தில் அமோக வெற்றி ஈட்டியுள்ளமை வடமாகாண மக்கள் தற்போது தமக்குள் ஒற்றுமையாகிவிட்ட செய்தியை வெளிகாட்டி இருக்கின்றது.

இதுவரை காலம் பட்ட துன்பங்களுக்கு வடமாகாண சபையின் வெற்றி தமிழ் பேசும் மக்களுக்க ஓரளவு நிம்மதியை வழங்கியுள்ளதுடன் இனியாவது வடமாகாண மக்களின் விடயத்தில் சர்வதேச சமகம் கண் திறக்கவேண்டும் என வடமாகாண புத்தி ஜீவிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.