Header Ads



பள்ளிவாசல்களைத் திறந்த ஜனாதிபதி, முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படார் - பெளஸி

(Tn) நாட்டில் பல பள்ளிவாசல்களைத் திறந்து வைத்து வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒரு போதும் செயற்படமாட்டார் என்பது உறுதி என சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச்.எம். பெளஸி தெரிவித்தார்.

சிலாபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் பெளஸி, பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாக வதந்திகளை பரப்பி முஸ்லிம் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முனையும் சக்திகளிலிருந்து மக்கள் தம்மைப் பாதுகாப்பது அவசியம் எனவும் தெரிவித்தார். ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்;

சிலாபம் தொகுதிக்கு நான் புதியவனல்ல. இப்பகுதிக்கு சேவை செய்த அமைச்சர் என்ற வகையில் இப்பகுதி மக்கள் முன் பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். சிறந்த விவேகமுள்ளவர்கள் இங்கு இம்முறை போட்டியிடுகின்றனர். மக்கள் சகோதரர்களாகச் செயற்பட்டு வெற்றிலைக்கு வாக்களித்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டியது அவசியம்.

ஹஜ் செல்லும் ஹஜ்ஜாஜிகளில் முதற் குழுவினர் ஹஜ் பயணம் மெற்கொள்கின்றனர். முதல் தடவையாக எமக்கு விமான நிலையத்தில் தொழுகை நடத்த தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நாம் தொழுகையில் ஈடுபட்டோம். அதற்காக ஜனாதிபதிக்கு நன்றிகள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சகல மதங்களையும் மதிப்பவர். கெளரவிப்பவர். சகல மக்களின் அபிமானத்தையும் பெற்றவர். முஸ்லிம் பள்ளிகளை திறந்து வைத்த பெருமைக்குரிய ஜனாதிபதி இவர். நுவரெலியா, பேருவளை, காத்தான்குடி போன்ற பகுதிகளில் பள்ளிவாசல்களை அண்மையில் திறந்து வைத்தார். தம்புள்ளை பள்ளிவாசலை உடைக்கப் போவதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. நான் இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு சம்பந்தப்பட்ட வர்களிடம் கலந்துரையாடினேன். இவ்வாறு ஒரு முடிவு எடுக்கப்பட்டவில்லை என்பது தெரிய வந்தது. முஸ்லிம்கள் இத்தகைய வதந்திகளில் ஏமாறக் கூடாது.

ஐந்து வேளை வானொலியில் ‘பாங்கு’ சொல்வதற்கு ஜனாதிபதியே வழி வகுத்தவர் அவர் முஸ்லிம்களின் நண்பர். முஸ்லிம் மக்களை நேசிப்பவர். அத்தகையவர் முஸ்லிம்களுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டார். பள்ளிகள் தொடர்பில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அரசாங்கம் அதற்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்.

3 comments:

  1. என்னதான் சொன்னாலும் சில ஜென்மங்கள் திருந்தவே திருந்தாது, அதில் ஒன்றுதான் இந்த முஸ்லிம் பெயர்தாங்கி அமைச்சரும். மக்களே ஹஜ்ஜாஜிகள் விமான நிலையத்தில் தொழுகை நடாத்த அனுமதிக்கப்பட்டது கூட தேர்தலை நோக்காகக் கொண்டுதான் என்பது புரிகிறதா? முஸ்லிம்களை எப்படி முட்டாள்களாக்கலாம் என்று தெரிந்து வைத்துக்கொண்டு கோடரிக்காம்புகள் மூலம் அரங்கேற்றம் செய்கின்றனர். கபுருக்கு போகவேண்டிய வயசில் இது தேவைதானா?

    ReplyDelete
  2. பள்ளிவாசல்களை திற்ந்த ஜனாதிபதி நாட்டில் பலபாகங்களிலும் உடைத்து நொறுக்கப்ட்டு முடப்பட்ட பள்ளிவாசல்கள் இந்துக் கோவில்கள கிறிஸ்தவ தேவாலயங்களை யார் செய்தார்கள் என்று கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு முன் நிருத்தியிருந்தால்....... அவருக்கு வாக்களித்து அவரது கைகளை பலப்படுத்தலாம்.....

    மதிப்புக்குறி பௌசி அவர்களே... தலைவருக்காக வாக்குப்பிச்சை வாங்கும் நீங்கள்... உடைத்து நொருக்கப்பட்டு மூடப்பட்ட பள்ளிவாசல்களை திரும்பவும் திறந்து வைப்பதற்கு தலைவர் மஹிந்த அவர்களை உங்களால் கேட்ட முடியாதா? அதுவும் வேண்டாம்.... தேர்தலுக்குப்பின் உடைப்பதற்கு திட்டமிட்டுள்ள தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொன்டுவருவதற்கு ஒரு 'அறிக்கை'யாவது இதுவரை சொல்லமுடியாத உங்களுக்கு 'ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துங்கள' என்று வாய் கூசாமல் சொல்வதில் ஏதோ சுயலாபம் இருப்பதாகத் எங்களுக்கு சொல்லத் தோன்றுகிறது.

    மனோ கணேசன் சொல்வது போல்.. வெற்றிலைக்கு போடும் வாக்கு பள்ளிவாசல்களையும் கோவில்களையும் உடைப்பதற்குத்தான்..... என்று சரியாகச் சொன்னது உங்களது மறமண்டைகளுக்கு ஏறவில்லையா.....? சேற்றில் கால்வைத்து விட்ட இவர்களுக்கு அதிலிருந்து வெளிவருவருவதற்காக இப்படி யெல்லாம் 'ஆட்டம்' போட வேண்டியுள்ளது.

    ReplyDelete
  3. ஓ,, ஓ,,, ஹஜ் சர்வீஸ் அந்த அளவுக்கு வேலை செய்கிறதோ.

    விமான நிலையத்தில் தொழுகை நடாத்தப்பட்டது எனும் செய்தி கிடைத்தவுடன், இது அரசியலாக்கப்படக்கூடாது என எழுத வேண்டும் என நினைத்தேன், முடிப்பதற்குள் பேசியேவிட்டார்கள்.

    ஹஜிகளுக்கு மட்டும்தான் தொழுகை கடமையோ!! அவ்வேளை எத்தனை முஸ்லிம்கள் அங்கு இருந்திருப்பார்கள், அவர்களுக்கு தொழுகையில்லையா? ஏன், அங்கு இப்போது எத்தனை வேளையாட்கள் என்றும் பயணிகள் என்றும் இருக்கிறார்கள், அவர்களுக்கு தொழுவதற்கு இடமில்லையா?

    முஸ்லிம்கள் பள்ளியோடு தொடர்புடைவர்கள் என்பதை எல்லோருமே பேசி வருகிறார்கள், ஏன், ஜனாதிபதி கூட பேசியிருக்கிறார். அங்கு வரும் பயணிகள் தொழுவதற்காக நிரந்தரமாகவே ஒரு இடத்தை தயார் செய்யுங்களேன் பார்க்களாம். முடியுமா? சும்மா பாசங்கு காட்டாதீர்கள்!!!

    ஒரு பக்கத்தில் பள்ளியில் அட்டகாசம் பண்ணிவிட்டு மறுபக்கத்தில் இந்தமாதிரி வேளைகள். இதற்கு வக்காளத்து வாங்க இந்த மாதிரி போக்கு கெட்ட மந்திரிகள்.

    நீங்கள் சொல்வது போல், பள்ளிகளைத் திறப்பதற்கு நேரம் ஒதுக்கும் ஜனாதிபதி அவர்கள், பள்ளிவாயல்களில் நடக்கும் அட்டகாசத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரம் ஒதுக்கக் கூடாதா?

    அமைச்சர் பௌசி அவர்களே! பள்ளிகள் உடைக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்கு சென்றுள்ளீர்கள். அங்கு எதைப் பார்த்தீர்கள்? அந்த நேரம் அமைச்சர் ஹிஸ்புல்லஹ் உரையாற்றையது போல் நீங்கள் பேசாது, இப்போது ஏன் இவ்வாறு கண்மூடித் தனமாகப் பேசுகிறீர்கள்?

    அமைச்சர் அவர்களே! உங்களைப் போல் இன்னும் சிலர், சிங்கள முஸ்லிம் உறவுகளுக்கு மத்தியில் கலங்கத்தை ஏறபடுத்த வெளி நாட்டு சதி என்று கூறிகிறார்கள். நாங்கல் கேற்கிறோம், வெளி நாட்டு சதியாகவே இருந்துட்டுப் பொகட்டும், வெளி நாட்டு சக்திகளுக்கு உருதுணையாக இருக்கும் கடும் போக்காளர்களான பல சேனா போன்றவர்களால் நாட்டுக்கு இழுக்கு ஏற்படுகிறது, நாட்டைப் பாது காக்க வேண்டும் என்று அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்காது இருப்பது ஏன்?

    வெளி நாட்டு சக்திகள் நுழைவதற்கு யார் காரணமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு நடவடிக்கை எடுத்தால் வெளி நாட்டு சக்தி தானாகப் போய்விடும். இந்நாட்டை ஆட்சி செய்வது வெளி சக்தியா? அல்லது உள் நாட்டு சக்தியா?

    சும்மா மக்களைக் குழப்பி உங்களது வோட்டு பிச்சையை கேட்காது நீங்கள் ஒரு முஸ்லிம், அல்லாஹ் உங்களிடம் பெரும் பொருப்பைத் தந்திருக்கிறான், அவனிடம் பதில் சொல்ல வேண்டுமே என்ற எண்னத்தோடு பேசுங்கள்.

    இப்படி அவர்களுக்காக பேசும் உங்களுக்கு எப்போதாவது அவர்களால் உங்களுக்கு ஆப்பு வைக்கப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். அவ்வேளை உங்களூக்காக கையேந்தும் ஒரு முஃமினையும் பெற்றுக்கொள்ளமாட்டீர்கள்?
    அல்லாஹ்வே போதுமானவன்.

    ReplyDelete

Powered by Blogger.