கல்குடா தெவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான இஸ்லாமிய பயிற்சி நெறி
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கல்குடா தெவ்ஹீத் ஜமாஅத்தின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் இலங்கை ஜம்மியதுஷ் ஷபாப் எனும் இலங்கை இஸ்லாமிய வாலிபர் ஒன்றியத்தின் அனுசரனையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பிரிவு மாணவர்களுக்கான ஒரு நாள் இஸ்லாமிய பயிற்சி நெறி 14-09-2013 காலை தொடக்கம் மாலை வரை காத்தான்குடி இஸ்லாமிக் சென்டர் ஜாமிஉத் தெவ்ஹீத் ஜூம்மா பள்ளிவாயலில் கல்குடா தெவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுத் தலைவரும்,இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரகருமான அஷ்ஷேய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) தலைமையில் இடம்பெற்றது.
இங்கு அல்குர்ஆன் சுன்னாவே இஸ்லாமிய வாழ்வின் மூலாதாரம் எனும் தலைப்பில் அஷ்ஷேய்க் ஜலீல் மதனியும், தௌஹீத் பிரச்சாரம் விமர்சனங்களும் விளக்கங்களும் எனும் தலைப்பில்; உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழின் ஆசியரும் ,பிரபல மார்க்க சொற்பொழிவாளருமான அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் (ஸலபி)யும் ,முஸ்லிம் மாணவ சமூகத்தின் எதிர்காலம் எனும்' தலைப்பில் மருதமுனை தாருல் ஹூதா மகளிர் அறபுக்கல்லூரியின் அதிபரும் மார்க்கப் பிரச்சாரகருமான அஷ்ஷேய்க் எம்.எல்.எம்.முபாறக் (மதனி)யும் ,இஸ்லாமிய அழைப்புப் பணி அணுகு முறையில் மாற்றம் தேவையா ? இல்லையா? எனும் தலைப்பில் கல்குடா தெவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுத் தலைவரும்,இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரகரும் ,ஒட்டமாவடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷேய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) ஆகியோர் சிறப்புரைகளை வழங்கினார்கள்.
இதன் போது மாணவர் அறிமுகம் ,கேள்வி பதில்,குழுச் செயற்பாடுகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இவ் இஸ்லாமிய பயிற்சி நெறியில் பங்குபற்றிய ஒட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 65 மாணவர்களுக்கும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கும் அதிதிகளினால் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் 4 நான்கு மாணவர்களுக்கும் விஷேட பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
Post a Comment