Header Ads



ராஜபக்­ஷ குடும்பத்தால் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது

(un) "நிறைவேற்று அதிகாரத்தைத் தக்க வைக்க ஆட்சி நடத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்­ஷ ஆகியோர் வெலிவேரிய மக்களின் குடிதண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கமாட்டார்கள். அதனால் தான் நாம் ஐ.நா விடம் முறையிட்டோம்.''

இவ்வாறு ரத்துபஸ்வெல விகாராதிபதி வண. தெரியே சிங் தம்ம தேரர் "உதயனி'டம் தெரிவித்தார். வெலிவேரிய சம்பவம் தொடர்பில் அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்ட அவர், தொழிற் சாலை குறித்த பக்கச் சார்பற்ற விசாரணை நடத்தி உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

ரத்துபஸ்வெல தொழிற் சாலையின் பணிகள் மிக இரகசியமான முறையில் ஆரம்பிக்கப்பட்டன. இதனை எதிர்த்து தான் நான் மறுபடியும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டேன். இருப்பினும், கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க என்னிடம் வழங்கிய உறுதிமொழிக்கு அமையவே போராட்டத்தைக் கைவிட்டேன்.

தொழிற்சாலை மறுபடியும் திறக்கப்பட்டால், தொழிற்சாலையை முற்றுகையிட்டு அங்கிருக்கும் அதிகாரிகளை பணயக் கைதிகளாக சிறைபிடிப்போம். குடிதண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கவே அரசு ஒரு மாதமாக இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றதெனில், வேறு ஏதாவது கேட்டால் என்ன நடக்கும்? எவ்வளவு காலம் எடுக்கும்?

எமது மக்களின் குடிதண்ணீர்ப் பிரச்சினைக்குத் தற்காலிகத் தீர்வு வழங்கும் வகையில் குழாய்கள் மூலமாக அரசு குடிதண்ணீரை வழங்குகிறது. இது எமக்குப் போதவே போதாது. அதனால் இம்மாதம் முடிவதற்குள் எமக்கு சுத்தமான குடி தண்ணீரைப் பெற்றுத் தருவதற்கு அரசு முதற்கட்ட நடவடிக்கையையாவது ஆரம்பிக்க வேண்டும்.

நிறைவேற்று அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற் காகச் செயற்படும் ராஜபக்­ஷ குடும்பத்தால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது. தீர்வு காணவும் மாட்டார்கள். அதனால்தான் நாம் ஐ.நாவிடம் முறையிட்டோம்.

இதனைக் கருத்திற்கொண்டு அரசுக்கு ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் வெலிவேரிய சம்பவம் தொடர்பில் அவதானம் செலுத்திய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கு நன்றி தெரிவிக்கிறோம்'' என்றார்.

No comments

Powered by Blogger.