பொதுபல சேனாக்கும், முஸ்லிம் காங்கிரஸுக்கும் வேறுபாட்டைக் காணமுடியாது - யு.எல். உவைஸ்
(ஆர்.நாஜி)
பொதுபலசேனா மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றால் வெளியிடப்படும் கருத்துக்களிடையே வேறுபாட்டைக் காண முடியாதுள்ளதென தேசிய காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளருமான யு.எல். உவைஸ் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்காக குருநாகல் மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் சத்தாரை ஆதரித்து 16ஆம் திகதி நள்ளிரவு குருநாகல் கிரியுள்ள பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தொரணகதெர எனும் கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்;. உதுமாலெப்பை, வேட்பாளர் அப்துல் சத்தார் உட்பட பலர் கலந்துகொண்டனர். அவர் அக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றுகையில்.
மறைந்த தலைவர் அஷ்ரப் இனவாதம் பேசி மக்களிடம் வாக்குகளைக் கேட்கவில்லை. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகளைப்; பெறுவதற்காக இனவாதக் கருத்துக்களை மக்கள் முன் வைத்து வருகிறது. உணர்ச்சி வார்த்தைகளால் மக்களை அடிமையாக்கி முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சிக்கிறது.
பெரும் தலைவர் அஷ்ரப் அகால மரணமடைந்தபோது இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் சோக வெள்ளத்தில் மூழ்கிக்கிடந்தபோது தலைவனின் மரணச் செய்து கேட்டு பட்டாசு கொழுத்தி இனிப்பு, குளிர்பாணம் பரிமாறி கொண்டாடிய தற்போதய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் குருநாகல் பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பற்றியும் பெரும் தலைவர் அஷ்ரப் பற்றியும் பேசுவதற்கு மு.கா.வின் தலைவர் அமர்த்தியிருக்கிறார். இவர் யார் என்பதையும் அவர் பின்னணி என்ன என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திருந்து கொண்டு அரசாங்கத்தின் அத்தனை சுகபோகங்களையும் அனுபித்துக்கொண்டு அரசாங்கத்தை மலினக்படுத்தும் கைங்கரியங்களை ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸ் செய்துவருவதை நாம் காண்கின்றோம்.
வாக்குகளுக்காக முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதக் கருத்துக்களை விதைத்து முஸ்லிம்களை மாற்று சமூகங்களிடையே காட்டிக்கொடுக்குக்கும் ஈனச் செயலலைப் புரிந்து கொண்டு இருக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிங்கள் தொடர்பாக நச்சுக் கருத்துக்களைத் பரப்பி வரும் பொதுபலசேனாவிற்குமிடையே என்ன வித்தியாசம் இருக்கிறது என நான் கேட்க விரும்புகின்றேன்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைத் தவிர எந்தக் கட்சியிடமும் ஒற்றுமையில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் அமர்ந்திருக்கும் மேடைகளில் சஜித் பிரேமதாசாவையோ கரு ஜயசூரியவையோ காண முடியாது. அவ்வாறு மு.கா.வின் தலைவர் ரவூப் ஹக்கீம் அமரும் மேடைகளில் அக்கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தைக் காணமுடியாது. இவ்வாறுதாhன் அவ்விரு கட்சிகளினதும் நிலையுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் இத்தகைய இரு கட்சிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களினால் நீங்கள் எத்தகைய நன்மையையும் அடையப்போதில்லை என்பதை நான் உறுதியாகக் கூற விரும்புகிறேன். ஆளும் அரசாங்கத்தினால் மாத்திரம்தான இந்தப் பிரதேச முஸ்லிம்களின் அபிவிருத்தி மற்றும் இதர பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணலாம்.
சகோதர வேட்பாளர் அப்துல் சத்தார். எவ்வித அரசியல் அதிகாரமுமில்லதாத போதும் அவரால் அரசாங்கத்தின் உதவி கொண்டு பல நன்மைகளை இப்பிரதேச முஸ்லிம்களுக்கு செய்துள்ளதை எங்களால் காணமுடிகிறது. அத்தகைய ஒருவர் இவ்வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இவரை வெற்றிபெறச் செய்வது குருநாகல் மாவடடத்திலுள்ள
ஒவ்வொரு முஸ்லிமினதும் தலையாய கடமையென உணருமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன். ஆளும் கட்சியினூடாக உங்களில் ஒரு பிரதிநிதியை வடமேல் மாகாண சபைக்கு அனுப்புவதற்கு உங்களுக்குக் கிடைத்துள்ள இறுதித் சந்தர்ப்பம் இது என்று நினைக்கின்றேன். இச்சந்தர்ப்பத்தைக் தவறவிடாது உங்களின் பிரதி நிதியை வடமேல் மாகாண சபையில் அமரச் செய்து உங்களின் தேவைகளை அவரின் அரசியல் அதிகாரத்தினூடாக அடைந்துகொள்வதற்னு ஒன்றுபட்டு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கோடரிக்கம்புகள் பல சைஸ்களில் உள்ளன அதில் இது ஒரு சைஸ்
ReplyDeleteஒருவரை ஒருவர் குறை சொல்லிப்பிளைப்பதை தயவு செய்து நிறுத்தவும்.
ReplyDeleteஇன்னொருவரைக்குறை சொல்பவரை நிராகரிக்கவேண்டும்.
You guys are same shit in differnt bottoles. Muslim community is having big vacume without a genuine political institution after Marhoom Ashraf.
ReplyDeleteஉங்களைப்போல் எமது சமூகத்தில் ஆயிரம் பேர்..... இதனால் தான் போன்று பல இயக்கங்கள எங்களுக்கெதிராக கிளர்ந்தெழுகிறார்கள். வாக்கு வேட்டைக்காக... ஒவ்வொரு வேட்பாளரும் ஒருவரையொருவர் புத்திகெட்டவர்களாக கருத்துவெளியிடுவதால் யாருக்கு என்ன நன்மை. தேர்தல் முடிந்ததும்... நீங்கள் நல்லவர்களாகிறீர்கள்... அப்பாவிகளான நாம் பாதிக்கப்படுகிறோம். இதுவே எம்மவர்களின் பொழப்பாகிப் போச்சைய்யா ??????????
ReplyDelete