பொத்துவில் தாருல் பலாஹ் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு கணினி மையம்
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் பொத்துவில் தாருல் பலாஹ் முஸ்லிம் வித்தியாலயத்தில் கணினி மையம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று 2013-09-04 நடைபெற்றது.அதிபர் கே.எல் கலந்தர்லெப்பை தலைமையில் நடைபெற்ற இந்நிழகழ்வில் திகாமடுல்ல மாவட்டபாராளுமன்ற உருப்பினரும் கல்முனைப்பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எச்.எம்.எம் ஹரீஸ் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.
இதில் பொத்துவில் பிரதேச சபைத்தவிசாளர் எம்.எஸ்.எம்.ஏ.வாசித் அக்கரைப்பற்று கல்விப்பணிப்பாளர் எம். காசிம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் பெற்றோர் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment