Header Ads



சிங்கள, முஸ்லிம் இனமோதலுக்கு அமெரிக்க உளவுத்துறை சீ.ஐ.ஏ. சூழ்ச்சி - அமைச்சர் எஸ்.பீ.

(மொஹொமட் ஆஸிக்)

இலங்கையில் சிங்கள மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இன மோதலை ஏற்படுத்த அமெரிக்காவின் உளவுத் துறையான சீ.ஐ.ஏ. சூழ்ச்சி செய்கிறது என உயர் கல்வி அமைசச்ர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

2013 09 15 மாலை அக்குறணை புளுகொஹொதென்னை மினா வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றம் போதே அவர் இதனை தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனயில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் ரிஸ்வி பாரூக் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்காக இடம் பெற்ற இத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மேலும் உரையாற்றிய அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க,

இன்று சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையே பாரிய ஒரு இன மோதலை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சிக்கின்றன.  இச்சக்திக்கு பின் அமெரிக்காவும் அதன் உளவுத் துறையான சீ.ஐ.ஏ. இயக்கமும் உள்ளது. எமது நாடு மிகவும் சிறிய நாடு. இச் சிறிய நாட்டுக்கு ஏன் அமெரிக்கா தலையிடுகிறது. என்று சிந்திக்க வேண்டும். ஜினீவாவில்  இலங்கைக்கு எதிராக 2 பிரேரணைகள் கொண்டுவரப்பட்டன. ஒன்றில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஓன்றில் நாங்கள் தோல்வியுற்றோம். எங்களது அயல் நாடான இந்தியாவும் எங்களுக்கு எதிராகவே வாக்களித்தது. அமெரிக்கா உற்பட்ட மேற்கத்தியத்தில் அனைத்து நாடுகளும் எங்களுக்கு எதிராகவே வாக்களித்தன.  ஆனாலும் சவுதி அரேபியாவை தவிர அனைத்து முஸ்லிம் நாடுகளும் எங்களுக்கு ஆதரவாகவே வாக்களித்தன.

2001 ம் ஆண்டு நான் சந்திரிக்காவின் அரசாங்கத்தைவிட்டு வெளி வந்து ஐக்கிய தேசிய கட்சியில் இனைந்து அரசாங்கம் ஒன்றை அமைத்தோம். அன்று அனைத்து முஸ்லிம் அமைசச்ர்களும் எதிர்த்தும் எதனையும் பொருட்படுத்தாது இஸ்ரேலை ரணில் இங்கு கொண்டு வந்தார். அப்போது எவ்வித அதிகாரமும் இல்லாமல் மஹிந்த ராஜபக்ஷ பலஸ்தீனத்துடன் இனைந்து இதனை எதிர்த்து போராடினார்.

உலகில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக இருந்த ஈராக்கை அமெரிக்கா தாக்க முயற்சித்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு சென்று சதாம் ஹுசைனுடன் இருந்தார். லிபயாவை தாக்க முயற்சிக்கும் போது அவர் அங்கும் சென்று கடாபியுடன் இருந்தார். இப்போது சிரியாவை அமெரிக்கா கண் வைத்தள்ளது. இப்போதும் நாங்கள் சிரிய நாட்டு முஸ்விம்கள் பக்கமே இருக்கின்றோம். மேற்கத்திய அமெரிக்காவின் பக்கம் அல்ல. முஸ்லிம்கள் அதிகம் விரும்புகின்ற கட்சியான ஐக்கிய தேசிய கட்சயின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இயலுமானால் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூறச் சொல்லி நான் கூறுகினறேன்.

இலங்கை உலகிற்கு அதிக கடனுல்ல நாடாக  சிலர் சித்தரிக்க முயற்சிக்கினறனர். அது பொய்யாகும் 2003 ம் ஆண்டு ரணில் ஆட்சியில் இருக்கம் போது நூற்றுக்கு 106 சத வீதம் கடன் இருந்தது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை தற்போது நுற்றுக்கு 78 சத வீதமாக குறைத்துள்ளார். அடுத்த வரவு செலவுத திட்டத்தில் அதனை நுற்றுக்கு 76 சத தீதமாக குறைக்க திட்டம் ஒன்றை அமுல் படுத்தி உள்ளோம்.

அடுத்தமாக அதிக வட்டிக்கு கடன் எடுப்பதாகவும் கூறுகின்னர். அதுவும் பொய்யாகும். நாங்கள் கூடுதலாக கடன் பெறுவது முஸ்லிம் நாடுகளில் ஆகும். அவை வட்டி அறவிடுவது இல்லை. மற்றவற்றிலும் 1 சத வீதத்திற்கும் குறைந்த வட்டியே அறவிடப்படுகிறது. மிகவும் அரிதாக 3 அல்லது 4 சத வீதத்தில் வட்டி அறவிடப்படகிறது.

முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைய தயக்கம் காட்டுவதையிட்டு ஜனாதிபதி மிகவும் கவலை அடைந்துள்ளார். எமது அரசாங்கத்தில் பல தரப்பானவர்கள் இருக்கினறார்கள். எனவே ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அரசின் கணக்கில் வைக்க வேண்டாம். ஜாதிக ஹெல உறுமைவின் அனைத்து செயல்களையும் அரசின் கணக்கில் போட வேண்டாம். தேசிய சுதந்திர முன்னனியின் அனைத்து நடவடிக்கையையும் அரசின் கணக்கில் இடவேண்டாம். அதே போல் முஸ்லிம் காங்கிரஸின் அனைத்து செயல்களையும் அரசின் கணக்கில் இட வேண்டாம். இன்று வெளிநாட்டு டொலர்களுக்காக பௌத்த மக்கள் மத்தியில்  போராட்டம் நடத்துபவர்கள் உன்மையான பௌத்தர்கள் அல்ல. அதே போல் 10 -15 பள்ளிகள் உடைக்கப்பட்டதாக கத்துபவர்கள் பள்ளிக்கு செல்வதில்லை. என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.

2 comments:

  1. புதிய கண்டுபிடிப்பு. வயிற்று பிழைப்புக்காக என்னவெல்லாம் சொல்லி மக்களை ஏமாத்தரான் என்று மட்டும் பாருங்கள்

    ReplyDelete
  2. அரசாங்கமென்றால் அனைத்திற்கும் நீங்கள்தானே பொருப்பு கூரவேண்டும்? உங்களை ஆதாரமாக வைத்துதான் பொத்த கடும்போக்கு அமைப்புகள் அனைத்தும் வீதிக்கு வந்தது, அதற்கு பாதுகாப்பாக உங்கள் பாதுகாப்பு கோத்தபாயவே இருக்கும்போது எப்படி அரசை குறை கூறவேண்டாமென மக்களை கேற்பது? புத்தியுள்ள கடவுள் நம்பிக்கை உள்ள எந்த மகனும் அரசுக்கு ஆதரவு அளிக்க மாடான். தேர்தல்கள் வந்தால் எப்படியும் மக்களை மடக்கூடிய பேச்சாளர்களை அரசு காசு கொடுத்து வாங்குவது சகஜம். இதை யாரும் நம்ப வேண்டாம்,.உங்கள் சொந்த புத்திகளை பாவியுங்கள். அமெரிக்காவின் சதிதான் பௌத்த முஸ்லிம்களின் பிரச்சினைக்கு காரணமென்றால், அதனை நடைமுறைப்படுத்தும் பொது பல சேனாவை எப்போவாவது உங்கள் அரசு தண்டித்ததுண்டா?தடை செய்ததுண்டா? அரசின் உள்வீட்டு செல்லப்பிள்ளைகளே அவர்கள். இந்த அரசை மிக விரைவில் நாட்டை விட்டும் விரட்ட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.