அம்பாரை மாவட்ட அரச உத்தியோகத்தர்களின் கவனத்திற்கு..!
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
ஏதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்ட தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட தெரிவு செய்யப்பட்டுள்ள அம்பாரை மாவட்ட உத்தியோகத்தர்கள் அனைவரும் அங்கு செல்லும்பொருட்டு போக்குவரத்து வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக அம்பாரை மாவட்ட உதவித்தேர்தல்கள் ஆணையாளர் திலின விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் நாளை (2013.09.1 யாழ்ப்பாணம் செல்லும் பொருட்டு சாய்ந்நமருது பிரதேச செயலகத்திலிருந்து பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் காலை 7.00 மணிக்கு இவை புறப்பட்டுச்செல்ல சகல ஆயத்தங்களும் செய்யப்பட்டுள்ளதாகவும் இதேவேளை உதவித்தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் செல்வதற்காகவும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாவும் அவை நாளை மறுதினம் ;2013.09.20ஆம் திகதி காலை 7.00 மணிக்கு இதே இடத்திலிருந்து புறப்படவுள்ளாகவும் நியமணம் செய்யப்பட்டுள்ள அனைத்து உத்தியோகத்தர்களும் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு சமுகம் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் இக்கடமையிலிருந்து தக்ககாரணமின்றி சமுகம்கொடுக்கத் தவறுபவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அம்பாரை மாவட்ட உதவித்தேர்தல்கள் ஆணையாளர் திலின விக்ரமரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment