மலேசிய நாட்டு உயர் ஸ்தானிகருடன் கல்முனை மேயர் சந்திப்பு
(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான மலேசிய நாட்டு உயர் ஸ்தானிகர் ஈ.எச். அஸ்மி சனூர்டீனை நேற்று (13.09.2013) உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
கல்முனை மாநகர சபையானது வரிவருமானங்களின் மூலம் திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் வடிகான் பராமரிப்பு போன்ற சேவைகளை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற செலவீனங்களுடன் இணைந்த பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வது கடினமான விடயமாகும். எனவே அபிவிருத்திக்கான நிதிகளை பெறுவதற்கான மாற்று உபாயங்களையும் வழிவகைகளையும் ஏற்படுத்துவது அவசியமாகும். இதற்கமைவாக கல்முனை நகரினை கிழக்கின் அழகிய நகரமாக மாற்றுவதற்கு முதல்வர் மேற்கொண்டுவருகின்ற முயற்சியின் ஒரு அங்கமாகவே மேற்படி சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது கல்முனை அபிவிருத்திக்கு மலேசிய அரசாங்கத்தின் உதவியினை பெறுவது தொடர்பான சாத்தியப்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பது நல்ல விடயம்தான், அவர்களோடு உக்கார்ந்து தேனீர் அருந்தி வழியனுப்பி வைப்பதோடு மட்டுமல்லாது, இந்நாட்டில் முஸ்லிம்களின் நிலைமையும், அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பரிதாப நிலைமைகளையும் எழுத்து மூலம் தெரியப்படுத்தி எமது பிரச்சினைகளை சர்வதேச சமூகத்திடம் கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்
ReplyDelete