கொழும்பில் மிகப்பெரும் புத்தக கப்பல் (படங்கள்)
(கொழும்பிலிருந்து ஏ.பி.எம்.அஸ்ஹர்)
உலகின் மிகப்பெரும் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நடமாடும் கப்பல் தற்போது இலங்கை வந்துள்ளது.
ஜேர்மன் நாட்டுக்குச்சொந்தமான இக்கப்பல் உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளுக்குச்சென்று புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.இக்கப்பலில் மிகவும் அரிய மற்றும் பெறுமதியான புத்தகங்கள் உள்ளன.அத்துடன் இதில் சிறுவர்களுக்கான விளையாட்டுப்பரிவு, பல்வேறு நாடுகளின் கலாசாரங்களைப்பிரதிபலிக்கும் கலாசாரப்பரிவு தொடர்பாடல் பிரிவு என பல்வேறு பிரிவுகள் உள்ளன.
கொழும்புத்துறைமுகத்திலுள்ள இக்கப்பலைப்பார்வையிட துறைமுக அதிகார சபை பொதுமக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது. எதிர்வரும் 23ஆம்திகதி வரை காலை 9.00மணி தொடக்கம் இரவு 8.00மணி வரை பொது மக்கள் இக்கப்பலைப்பார்வையிடலாம்.
Post a Comment