Header Ads



முஸ்லீம் கட்சிகள் தங்களுக்குள்ளே வசைபாடுவதை முதலில் நிறுத்துவார்களா..?

(தந்திமகன்)

நாட்டில் நேற்றுடன் முடிவடைந்த மாகாணசபைத் தேர்தல் களம் முடிவுக்கு வந்துவிட்டது. வெற்றியாளரகள் புதுமாப்பிள்ளைகோலம் போடுவார்கள். தோல்வியுற்றவர்கள் மூலைகளுக்குள் முடங்கிவிடுவார்கள். ஒளித்துக் கொண்டவர்களைத்தேடிப்பிடித்து சாத்துபவர்களும் உண்டு. அதுஒருபுறம். இலங்கை ஒரு ஜனநாயகமிக்க நாடு என்கிறோம். சுதந்திரமானமுறையில் கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை அரசியல் யாப்பில் உண்டு. ஆனால் நேற்றுடன் முடிவடைந்த தேர்தல் பரப்புரையில் ஒருவரை ஒருவர் வசைபாடியே முடித்துவிட்டனர். பின்னர் அமரப்போகின்ற மாகாணசபையில் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டினதும், மக்களினதும் அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்கி இயங்குவார்கள். அப்போது ஒருவரைப்பார்த்து பேசிய வசைகளை எவ்வாறு மூடிமறைக்கப்போகின்றார்கள் என்பது ஒருபுறமிருக்க இலங்கையின் முக்கிய முஸ்லீம் கட்சியான முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் வடபுலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது வடக்கில் ஆட்சியமைக்கப்போகின்ற தமிழ் கூட்டமைப்புக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

ஆட்சியில் மாத்திரம் பங்கு, தேர்தல் காலத்தில் மட்டும் பிரிப்பு எனப்படும் மந்திரத்தை தன்மேல் சுமந்துகொண்டு அரசிற்கு எதிராக வசைபாடியவர்களுள் அந்தக் கட்சிக்கு முக்கிய பங்குண்டு. கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போதும் இவ்வாறுதான் தனித்துவம் என்றபேரில் அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துவிட்டு ஐப்பனே சரணம் என்பதுபோல மீண்டும் அரசிடம் தஞ்சமடைந்தனர். அதேநிலைதான் இன்றும் அக்கட்சியின்போக்கு அமைந்திருக்கின்றது. அண்மையில் மத்தியமாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் அபேட்சகர் ஒருவர் அரசை கடுமையாக விமர்ச்சித்திருந்தார். நேற்றுடன் முடிவடைந்த தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தில் அமைச்சர்களாகவும், பிரதியமைச்சர்களாகவும் அமர்ந்து முஸ்லீம்களின் பிரச்சினைகளை அரசிடம் கூறுகின்றபோது இவர்களது பேச்சை அரசு ஏறெடுத்துத்தான் பார்க்குமா என்ன? உண்மையில் அரசின் விசுவாசியாக இருந்தால் அரசுக்கு எதிராக விமர்சனம் செய்திருக்கக் கூடாது. இதனைத்தான்; அன்று அந்தக் கட்சியின் முக்கிய பிரமுகரான கருத்திட்ட அமைச்சர் அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக இருந்தால் அமைச்சுப் பதவியினை தூக்கி வீசுவோம் என்று கூறியிருந்தார். எதுவும் நடைபெறாத நிலையில் உரிமைகளை தட்டிக் கேட்கின்றோம் என்று அரசுடன் இணைந்திருந்து உரிமைகளை தட்டிப்பெறமுடியாது அல்லவா!

உரிமைகளைப் பெறவேண்டுமாக இருந்தால் தமிழர்களிடம் பாடம் கற்கவேண்டுமென அந்த முஸ்லீம் கட்சியின் தலைவர் கூறியதற்குப் பதிலாக இலங்கை மக்கள் கட்சியின் செயலாளர் தெரிவித்திருந்த கருத்தினை சற்று சிந்திக்கவேண்டும். அதாவது 'எல்லா வளங்களும் பெற்று சிறப்பாக வாழ்ந்த வட பகுதி முஸ்லிம்களை விடுதலை புலிகள் வெளியேற்றியபோது அவர்களுக்காக குரல் கொடுத்தவர் அமைச்சர் றிஸாட் பதியூதீன் மட்டுமே. உரிமைகள் வேண்டும் என வாய்கிளிய கத்தும் முஸ்லிம் காங்கிரஸ் வடபதி மக்களின் துயர்களை துடைப்பதற்கு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஒன்றும் இல்லை இதனுடாக நமது முதல் எதிரி யார் என்பதை விளங்க வேண்டும் வாக்குகள் பிரிவதை தடுப்பதற்காகவே நாங்கள் இணைந்து போட்டியிடுகின்றோம். எமது சமூகங்களுக்கு இப்போது இருக்கின்ற சோதனைகளுக்கு மத்தியில் யாரிடம் எமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளாலாம். என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்' என்றும் அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறு தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்பதே இவர்களின்வேலை.

அதேவேளை தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினரான யு.எம். உவைஸ் 'மு.கா.தற்போது எந்தவொரு கொள்கையும், கோட்பாடும் கிடையாது. தலைவர் றவூப் ஹக்கீம் ஒரு பக்கம், தவிசாளர் பசீர் சேகுதாவூத் இன்னுமொரு பக்கமும், செயலாளர் ஹசன் அலி இவர்களுக்கு எதிரான பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாப்பக்கங்களிலும் நின்று கொண்டு  முஸ்லிம் சமூகத்தை குழப்பிக் கொண்டு செல்வதை எங்களால் அறிந்து கொள்ள முடியும். மாபெரும் தலைவர் அஸ்ரபின் மறைவுக்குப் பின்பு முஸ்லிம் சமூகத்தினுடைய எந்த உரிமையை றஊப் ஹக்கீம் பெற்றுத் தந்திருக்கிறாh?; பத்திரிகைகளில் ஊடகங்களில் அட்டகாசமாக கொட்டெழுத்தில் அறிக்கைகளை விட்டதைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறார்கள். தோதல்;கள் வரும் போது முஸ்லிம் மக்களை ஏமாற்றி உரிமைகள் என்றும், விடுதலை என்றும் சமூகம் என்றும், சுயநிர்ணயம் என்றும் தமிழ் வசனங்கனைக் கூறி முஸ்லிம்களை உணர்ச்சி வசப்படுத்தி ஏமாற்றியதைத் தவிர வேறு என்ன உரிமைகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்;' என்று தெரிவித்திருந்தார்.

மேலும் 'முஸ்லிம்களின் தனித்துவம், முஸ்லிம்களின் சுயாட்சி, என்று மார்பு தட்டிப் பேசுகின்ற மு.கா. சர்வதேச மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை;கு வந்த போது அவர்களிடம் என்ன பேசினாhகள்; என்பதை இந்த நாட்டு மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பகிரங்கமாகக் கூற முடியுமா? நவநீதம் பிள்ளையினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி முஸ்லிம் தலைவவர்களினால் எதுவும் கூறப்படவில்லை என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார்' என்றும் அவர் கூறினார். இவரது கருத்தின் பிரகாரம் தேசிய காங்கிரஸூம் முக்கிய முஸ்லீம்களின் கட்சிதானே அவர்களும் நவநீதம் பிள்ளையை சந்தித்து முகாவினர் விட்ட பிழைகளை சுட்டிக் காட்டி இந்த அரசினாலும், பேரினவாதிகளினாலும் உடைக்கப்படுகின்ற பள்ளிவாசல்கள் பற்றியும், முஸ்லீம்களுக்கு எதிராக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் பற்றியும் ஏன் நீங்கள் கூறவில்லை என்று நமது நியாயத்தைக் இவருக்கு முன்னால் வைப்போமே! பதிலை நீங்கள் கூறுங்களேன்?

இலங்கையில் அரசுடன் ஒட்டியுள்ள முஸ்லீம் கட்சிகள் வெறுமனே வாய்ப்பேச்சில், வசைபாடுவதில் மாத்திரம் இவர்களை விட்டால் அவர்களுக்கு அவர்களே நிகர். அதேவேளை அண்மையில் பொதுபலசேன இலங்கையின் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் முழுப்பிரதேசத்தையும் இன்னும் சில நாட்களுக்குள் பௌத்தபிரதேசமாக பிரகடணப்படுத்தப்போவதாகவும், இந்நாடு தனித்துவமான பௌத்தர்களுடையது என்பதற்கான வேள்வியாகம் செய்யப்போவதாகவும் கூறியுள்ளனர். வாய்ப்பேச்சில் வசைபாடும் முஸ்லீம் கட்சிகள் இந்த பேச்சாடலுக்கு என்ன பதில் கூறப்போகின்றார்கள் என்பதையாவது சற்று இந்தத் தேர்தல் காலத்தில் பேசினார்களா? ஆளுக்காள் சளைத்தவர்கள் அல்ல என்பதை வசையாகவே பாடி முடித்துவிட்டனர். பேரினவாதிகளின் சிக்களுக்குள் சிக்கியுள்ள முஸ்லீம் சமுகத்தின் விடுதலைக்கான போராட்டத்தைப் பற்றி எவராவது சிந்தித்தார்களா? தமிழர்களைப் பற்றி புகழ்பாடுபவர்கள் அவர்களது தியாகத்தின் ஓரத்தையாவது தொடத்தான் முடியுமா? எனவே தேர்தல் காலங்களில் மாத்திரம் வசைபாடுவதை தவிர்த்து முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற, படப்போகின்ற எதிர்விளைவுகளை தடுத்துநிறுத்த அனைத்து முஸ்லீம் தலைவர்களும் காரியமாற்ற வேண்டுமென்பதே முஸ்லீம்களின் இன்றைய தேவையாகும். ஒன்றுமைப்படுவார்களா? நிறைவேற்றுவார் களா? அல்லது வசைபாடுவதைத்தான் நிறுத்துவார்களா?

2 comments:

  1. முதலில் உங்களைப் போன்ற அரை குறை எழுத்தாளர்கள்(?) முஸ்லிம் காங்கிரஸை வசை பாடுவதை நிறுத்துவீர்களா? உங்களைப் போன்றவர்கள் எவ்வளவுதான் வசை பாடினாலும் முஸ்லிம் அரசியலில் முஸ்லிம் காங்கிரஸைப் புறக்கணிக்க முஸ்லிம்கள் தயாரில்லை என்பதை இந்தத் தேர்தல் முடிவுகளும் உணர்த்தியிருக்கின்றன.

    ReplyDelete
  2. ERUKKALAMPIDDI MUSLIKALIN MARGOOM NOORDEEN MASOOR AVARKAL MEETHU IRUNTTHA NANRIYUNARVE SLMC KKU KIDAITTHA ANTHA ORU AASANAM TAVIRA SLMC KKU KIDAITTHA VAAKKU ALLA...

    ReplyDelete

Powered by Blogger.