இன ஒற்றுமையை வலியுறுத்துவோருக்கு வாக்களிக்குமாறு ஜே.வி.பி. வேண்டுகோள் .
இனவாதம் பேசி மக்களை தூண்டிவிட்டு ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டவர்களால் நாட்டிற்கோ நாட்டு மக்களுக்கோ இதுவரை எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. எனவே இனவாத செயற்பாட்டாளர்களுக்கு வாக்களிக்காமல் இன ஒற்றுமையை வலியுறுத்துவோருக்கு வாக்களிக்குமாறு ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாருக்கு வாக்களிக்கின்றோம் என்பதை விட எதற்காக என்ன நோக்கமுடையவர்களுக்கு வாக்களிக்கின்றோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் இல்லையேல் இன ஐக்கியத்தை ஒரு போதும் ஏற்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி அதிகாரத்தை பெற்றுக்கொண்டவர்கள் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார்களா என்று பார்க்க வேண்டும். வெறுமனே பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
இனவாதத்தை யார் பேசினாலும் அது தவறு எனவே அவ்வாறானவர்களை மக்கள் ஆதரிக்கக் கூடாது என்பதை எமது கோரிக்கை. மக்களை திசை திருப்பி மீண்டும் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்க இடமளித்தால் அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் மக்களே மீண்டும் சுமக்க வேண்டி ஏற்படும்.
வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இனவாதமாக செயல்பட்டால் அதனால் அரசாங்கம் தெற்கில் அதிக பலனடையும் என்பதே யதார்த்தம். எனவே இவற்றை கருத்திற்கொண்டு செயல்பட வேண்டும். இல்லையேல் மக்கள் விரோத இந்த அரசையும் அதன் அராஜக செயற்பாடுகளையும் ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது.
யுத்த வெற்றியை மூலதனமாக வைத்துக் கொண்டு அதனையே பேசி பேசி மக்களை ஏமாற்றி தேர்தல்களில் வெற்றி பெற்று வந்தது. இந்த அரசாங்கம் ஆனால் அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு யுத்த வெற்றியை விற்று பிழைக்க முடியாமல் அரசாங்கம் தத்தளித்துக் கொண்டிருந்த போது அதற்கு கைக்கொடுத்துள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தை அரசாங்கம் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. அதன் மூலம் வீழ்ச்சியடைந்துள்ள தமது அரசியல் பலத்தை மீண்டும் கட்டியெழுப்ப கூட்டமைப்பினர் உதவி புரிந்துள்ளனர். எனவே இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அவதானமாக செயல்பட வேண்டும்.
வடக்கில் சுயாதீன செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. ஆகையால் அங்கு நியாயமான ஒரு தேர்தலை எதிர்பார்க்க முடியாதுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். vi

Post a Comment