முசலி பிரதேச செயலாளர் பிரிவில் திவிநெகும திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மரக்கன்றுகள்
பொருளாதார அபிவிருத்தியமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வெழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மாங்கன்றுகள்,தேசிக்கன்று மற்றும் பலா போன்ற கன்றுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது விசேட அதிதியகாக முசலி பிரதேச சபையின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.அறபாத் அவர்களும்; செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இணைப்பாளர் மௌலவி றாபி அவர்களும் கலந்து பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிவைத்தார்கள்.
இந்நிகழ்வில் பூநொச்சிக்குளம் கிராம உத்திகோத்தர் பிரிவிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்ர் எஸ்.எச்.எம். வாஜித் மணற்குளம் அலுவலகத்தில் வைத்து; அவர்களினால் பயனாளி ஒருவருக்கு கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டடுவதை காணலாம்.
Post a Comment