முஸ்லிம்களுடைய வாக்குகளை பலவந்தமாக சுவீகரிக்க முயற்சி
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சிகளுக்கு அரசாங்கம் இது வரைக்கும் எவரையும் கைது செய்யவோ எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை சுவீகரிப்பதற்காக மாத்திரம் எதிர் வரும் 17 ஆம் திகதி வடமேல் மாகாணத்திலுள்ள குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலுள்ள அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் புத்தளத்துக்கு அழைத்து சமாதான அமைப்பொன்றை உருவாக்குவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலை தேர்தலுக்கு முன்னர் செய்து முஸ்லிம் மக்களுக்கு உள்ள பிரச்சினைக்கு சமூகமான தீர்வினைப் பெற்றுக் கொடுத்திருக்கலாம். ஆனால் இது தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன. இது முஸ்லிம்களுடைய வாக்குகளை பலவந்தமாகப் பறிப்பதற்கான தேர்தல் குண்டாகும் என்று குருநாகல் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் முஹமட் ரிபாழ் தொவித்தார்.
குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் முஹமட் ரிபாழை ஆதரித்து பறகஹதெனியவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது அவர் இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார். இதில் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமவீர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பள்ளிவாசல்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளன. இதில் ஜனாதிபதி அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார் என்று சுட்டி காட்டப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் இந்தக் கூட்டம் பற்றி என்னிடம் ஐந்து ஆறு பள்ளித் தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் இது தேர்தலுக்காக ஏதோ சொல்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் தாங்கள் செல்லாவிட்டாலும் வேறு நபர்களைக் கொண்டு போய் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிவிட்டு அறிக்கை விடுவர் என்று கதைத்துக் கொள்கின்றார்கள். தம்புள்ளை பள்ளி முதல் கிராண்பாஸ் பள்ளிவரை 35க்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கம் இது வரைக்கும் எந்தவிதமான சட்ட நடடிக்கையும் எடுக்கவில்லை. கிராண்பாஸ் பள்ளி உடைப்பின் போது பொலிஸ் அதிகாரிகள் சும்மா பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர். பெஷன் பக் தாக்குதலின் போது வீடியோ கமராவில் பதிவு செய்யப்பட்ட நபர்கள் இனங்காணபட்ட போதிலும் அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. பொது பல சேனா என்ற அமைப்பு பகிரங்கமாக முஸ்லிம்களுக்கு எதிராக முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் காரியங்களை தொடர்ச்சியாகச் செய்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக எமது பறகஹதெனியப் பிரதேசத்தில் இரு பள்ளிவாசல் முன்னால் அமைந்துள்ள அமைதியைப் பேணவும் என்ற விளம்பரப் பலகையை பொது பலசேனா என்ற அமைப்பு குருநாகல் நகரில் நடந்க பொதுக் கூட்டத்தின் போது இந்த விளம்பரப் பலகை 24 மணித்தியாலயத்திற்குள் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பகிரங்க முன் வைத்தனர். மறுநாள் காலையில் பொலிஸார் அதனை அகற்றுவதற்காக வருகை தந்தனர். அதனைத் தடுக்க முற்பட்ட போது ஊரில் ஒரு பதற்ற நிலை ஏற்பட்டபது. ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் இன்று வரையிலுள்ள இந்தப் பதாதை வீதிப் போக்குவரத்துச் சபை அங்கீகாரத்துடன் தான் போடப்பட்டுள்ளது. அது நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து தொடரபட்டு வருகின்றது இவ்வாறு தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக தீய சக்திகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே சிறுபான்மையின முஸ்லிம்களின் நலன்களில் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்காத இந்த அரசாங்கம் மாகாண சபையின் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக முஸ்லிம்களுடைய வாக்குகளை சுவீகரிப்பதற்காக இந்தத் தேர்தல் கால கட்டத்தில் சமதான அமைப்பொன்றை ஸ்தாபித்தல் என்ற அடிப்படையில் வடமேல் மாகாணத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளை அழைத்திருப்பது எந்தவையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகத்தின் கட்டமைப்பு எங்கிருந்து ஆரம்பிக்கின்றது என்பது இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
ReplyDeleteஅதனால்தான் இப்படி வாக்களிக்கும் நேரங்களில் அவர்கள் நமது சமூகத்தை நாட்டுத் தலைமையிடம் கூட்டிக் கொடுக்கும் வேலைகளையும் கச்சிதமாகச் செய்து வருகின்றனர்.
எவர் வந்து என்ன கூட்டங்களை நடாத்தி எத்தகைய அறிக்கைகளை விட்டாலும் 21ம் திகதி வாக்களிப்பது எமது மக்களேயாகும். நேரகாத்தோடு மக்கள் சென்று தமது தீர்ப்புக்களை அளிக்க வேண்டும்.
கேவலம், ஆங்கிலேயர் காலத்திலிருந்து தெருவோரத்தில் நடப்பட்டிருக்கும் ஒரு பெயர்ப்பலகைக்கே இந்த நாட்டில் போராட வேண்டியுள்ளதென்றால் பிறகு என்ன கோதாரிக்கு இந்த அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்?
எப்படி எமது உரிமைகளை இவர்கள் எதிர்காலத்தில் பாதுகாப்பார்கள்? அதற்கு என்ன உத்தரவாதம்?
பள்ளிவாசல் நிர்வாககங்கள் அரசுக்கே வாக்களிக்க வேண்டும் எனத் தீர்மானம் எடுத்து அறிவித்தால் மக்களும் துணிவுடன் பதில் அறிக்கைகளை விட வேண்டும்.
இதன் பிறகு முஸ்லிம் சமூகத்திற்கு ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை விடும் பள்ளிவாசல் நிர்வாகிகளே எமக்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்று தெளிவாகச் சொல்ல வேண்டும்.
அப்படி மக்களும் தெளிவாகச் சொன்னால்தான் கூலிக்கு மாரடிக்கும் சில பள்ளிவாசல் நிர்வாகங்களும் தத்தமது வேலைகளைப் பாhத்துக் கொண்டு கிடப்பார்கள்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
இதில் மிகவும் வேடிக்கை என்னவென்றால் பொது பல சேனர்கள் இத்தேர்தலின் போது வாய்திறக்கவே இல்லை , அரசாங்கத்தின் மீது அப்படியொரு பற்று அவர்கழுக்கு
ReplyDeleteBBS கொடுத்த காலக்கெடு முடிவடைய முன்னரே பறகஹதெனிய பள்ளிவாசல் அருகில் இருக்கும் பெயர்பலகையை அகற்ற முயற்சித்த பொலீசார் ஏனைய முஸ்லீம்களுக்கெதிரான அடாவடித்தனத்தை கண்டும் கானாது இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ReplyDelete