Header Ads



ஜிகாத் வாசகத்துடன் மகனை பாடசாலைக்கு அனுப்பியவர்கள் கைது - பிரான்சில் சம்பவம்


நான் வெடிகுண்டு என்ற வாசகத்துடன் குழந்தைக்கு டி ஷர்ட் போட்டு பள்ளிக்கு அனுப்பிய தாய், உடந்தையாக இருந்த மாமாவுக்கு பிரான்சில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த பிரபலமான இரட்டை கோபுரங்களை, கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி அல் கய்தாகள் தகர்த்தனர். இதை நினைவுப்படுத்தும் வாசகம் அடங்கிய  டி ஷர்ட்டை வாங்கி தனது மகனுக்கு போட்டு பள்ளிக்கு அனுப்பிய தாய்க்கு பிரான்சில் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிரான்சில் வசிப்பவர் போச்ரா பாகர். இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.  செப்டம்பர் 11ம் தேதி பிறந்ததால், குழந்தைக்கு ஜிகாத் என்றே பெயர் வைத்தார். இவர் தனது குழந்தையை கடந்த ஆண்டு நர்சரி பள்ளிக்கு அனுப்பினார். செப்டம்பர் மாதம் ஜிகாத் அணிந்து வந்த டி ஷர்ட்டை பார்த்து ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், ஜிகாத், பிறந்தது செப்டம்பர் 11, நான் வெடிகுண்டு என்ற வாசகம் இருந்தது. உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

அவர்கள் உடனடியாக போலீசில் புகார் தெரிவிக்க தீவிர விசாரணை நடந்தது. பிரச்னை பெரிதானதை அடுத்து உடனடியாக போச்ரா மன்னிப்பு கேட்டார். எனினும், பிரான்ஸ் சட்டத்தை மீறியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை உள்ளூர் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நிம்ஸ் நகர் கோர்ட்டில் போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தீவிரவாதத்தை தூண்டும் வகையில் டி ஷர்ட் போட்டு குழந்தையை பள்ளிக்கு அனுப்பிய தாய்க்கு இந்திய ரூ.1.75 லட்சம் அபராதமும் ஒரு மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். டி ஷர்ட் அணிந்து செல்ல உதவிய சிறுவன் ஜிகாத்தின் மாமா ஜியாத்துக்கு ரூ.3.5 லட்சம் அபராதமும் 2 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.