மேற்குலக நாடுள் சிரியாவை தாக்கினால் சிரியாவின் நட்புநாடுகள் பதில் தாக்குதல் மேற்கொள்ளும்
சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமைக்குரிய அத்தட்சிகள் எதுவும் அமெரிக்காவிடம் இல்லையென சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிடம் கூறியுள்ளார். திங்கட்கிழமை ஒளிரப்பாகிய பி.பி.எஸ். நேர்காணலிலேயே அசாத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுள் சிரியா மீது தொடர் தாக்குதல் நடத்துமானால் சிரியாவின் நட்புநாடுகள் பதில் தாக்குதல் மேற்கொள்ளுமெனவும் அசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பாவில் ஐரோப்பிய ஒன்றியமற்றும் அரபு வெளிவிவகர அமைச்சர்களுடான சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் ஹெரி சிரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு சர்வதேச ஆதரவினை திரட்டுவதில் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். சிரியாவில் அமெரிக்காவின் இராணுவத்தலையீடு குறித்த இறுதித்தீர்மானம் தொடர்பான விவாத அமெரிக்கா காங்கிரஸில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் அசாத் தனது நேர்காணலில்; டமாஸ்கஸ் தாக்குதலின் பின்னணியில் சிரிய படைகள் உள்ளதென்பதனை நிரூபிக்கும் தேவை அமெரிக்காவிற்கே உள்ளது. எனது சொந்த மக்களுக்கு எதிராக நானே இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்குரிய எதுவிதமான ஆதாரங்களும் இல்லை. ஆனால் இரசாயன ஆயுதங்கள் இருந்திருந்தாலும் அதுமத்திய அரசின் உத்தரவின் கீழ் வைத்திருக்கப்படவில்லை. ஒரு தாக்குதலுக்கு எதிரான தாக்குதலுக்காக என்று ஆதரவாளர்கள் இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கலாம் எனத் தெரிவித்தõர். இவ்வாறான கருத்துக்களை அசாத் முன் வைத்திருந்த போதும் அவர் தனது அரசு இரசாயன ஆயுதங்களை வைத்திருந்ததா இல்லையா என்பதனை ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ இல்லை.
Post a Comment