Header Ads



ஈராக்கில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ஈரான் திட்டம்..?


(Thoo) ஒபாமாவின் அரசு சிரியாவின் மீது ராணுவ நடவடிக்கையை துவக்கினால் அதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த அங்குள்ள போராளிக் குழுக்களுக்கு ஈரான் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புலனாய்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஈரான் அதிகாரிகள் அளித்த ரகசிய தகவலை கசியச் செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாக்தாதில் அமெரிக்க தூதரகத்தையொட்டிய நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தாக்குதல் நடத்தும் இடங்கள் குறித்த தகவல் கிடைத்ததா என்பதை அதிகாரிகள் கூறவில்லை. அமெரிக்க குடிமக்கள் ஈராக்கிற்கு செல்வதை தவிர்க்குமாறு அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சில தினங்கள் முன்பு உத்தரவிட்டிருந்தது.

ஈரான் ராணுவத்தில் குத்ஸ் பிரிவு, ஈராக்கில் உள்ள போராளிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்தி கூறுகிறது. ஆனால், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகமும், சி.ஐ.ஏ.வும் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
 

No comments

Powered by Blogger.