கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கை..!
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்,
கிழக்கு மாகாணம்,
2013.09.21
தேசிய பாடசாலைகள் பணிப்பாளர்,
ஆசிரியர் இடமாற்றப்பிரிவு,
கல்வி அமைச்சு,
இசுருபாய,
பத்தரமுல்ல.
ஐயா,
இடமாற்றத்தின் போது ஆசிரியர்கள் அனைவருக்கும் சம நீதி கிடைக்கக் கோரல்.
இப்படிக்கு
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்
ஒப்பம்: பெயர்:
பிரதி : கொளரவ கல்வி அமைச்சர், கல்வி அமைச்சு.
கிழக்கு மாகாணம்,
2013.09.21
தேசிய பாடசாலைகள் பணிப்பாளர்,
ஆசிரியர் இடமாற்றப்பிரிவு,
கல்வி அமைச்சு,
இசுருபாய,
பத்தரமுல்ல.
ஐயா,
இடமாற்றத்தின் போது ஆசிரியர்கள் அனைவருக்கும் சம நீதி கிடைக்கக் கோரல்.
தேசிய பாடசாலைகளில் மிக நீண்டகாலமாக சேவையாற்றுகின்ற ஆசிரியர்களுக்கான இடமாற்றமானது பலகட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. அதன் முதற்கட்டமாக 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக ஓர் பாடசாலையில் கடமையாற்றியவர்களுக்கான இடமாற்றம் அண்மையில் நடைபெற்றது.
அவ்வாசிரியர்கள் எல்லோரும் தங்களது புதிய பாடசாலையில் கடமையினை பொறுப்பேற்று அப்புதிய பாடசாலையில் கற்பித்துக்கொண்டிருக்கும் அதேநேரம், ஒரு சில ஆசிரியர்கள் புதிய பாடசாலையில் கடமையினை பொறுப்பேற்றுவிட்டு தங்களது பழைய பாடசாலையில் கற்பித்துக்கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் மத்திய கல்வியமைச்சுக்கு புறம்பாக இருக்கின்ற மாகாணக் கல்விப்பணிப்பாளரின் (PDE) செல்வாக்கினை பயன்படுத்தி தங்களுக்கு மத்திய கல்வியமைச்சினால் வழங்கப்பட்ட இடமாற்றத்தை - தற்காலிக இணைப்பு என்ற பெயரில் தங்களது பழைய பாடசாலையில் கற்பித்துக்கொண்டிருக்கின்றனர்.
இச்செயற்பாடானது இடமாற்றத்துக்கு உட்பட்ட ஏனைய ஆசிரியர்களான எங்களது மனதினைப் புண்படுத்துகிண்ற செயலாகும். மேற்படி விடயத்துக்கான எடுத்துக்காட்டாக, KM / ZAHIRA COLLEGE – KALMUNAI ல் Mr. U.L. Abul Hassan ஆசிரியர் அவர்களும், KM / AL - ASHRAQ National School, NINTHAVUR ல் Mr. A.L.A. Razack ஆசிரியர் அவர்களும் உள்ளனர்.
இவர்களுக்கு 2013.08.05 ம் திகதி வரை என்றும் பின்னர் 2013.12.31 ம் திகதி வரை என்றும் தற்காலிக இணைப்புக்கான நீடிப்பு மாகாண கல்விப்பணிப்பாளரினால் (PDE) கொடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறான செயலை ஏனைய ஆசிரியர்களுக்கும் PDE அவர்கள் செய்யமாட்டாரா ?
இப்படிக்கு
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்
ஒப்பம்: பெயர்:
பிரதி : கொளரவ கல்வி அமைச்சர், கல்வி அமைச்சு.
Post a Comment