Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் குரல் கொடுக்க வேண்டும் - ரவூப் ஹக்கீம்


வடமாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எச்.எம். றயீஸ், ஏனைய வேட்பாளர்கள் ஆகியோரை கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் வெள்ளிக்கிழமை (27) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.  இதன் போது இத்தேர்தல் குறித்து மீளாய்வு செய்யப்பட்டதோடு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. 

வட மாகாண சபையில் மன்னார் மாவட்ட மக்களுக்காக மட்டுமன்றி, ஏனைய மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்காகவும் மாகாண சபை உறுப்பினர் எச்.எம். றயீஸ் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம், தேர்தலில் போட்டியிட்ட கட்சியின் ஏனைய வேட்பாளர்களும் அவருடன் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.  கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.   

இக் கலந்துரையாடலில் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலீப் பாவா பாரூக், பைசல் காசிம், எம்.எஸ்.எம். அஸ்லம், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான ஏ.எம். ஜெமீல வடமேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எச்.எம். நியாஸ்  ஆகியோரும் பங்குபற்றினர்.  


No comments

Powered by Blogger.