காத்தான்குடியில் சவூதி அரேபிய உதவி அமைச்சர் (படங்கள்)
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
சவூதி அரேபியாவின் மத விவகார மற்றும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்களுக்கு பொறுப்பான உதவி அமைச்சரும் அதன் பணிப்பாளர் நாயகமுமான அஷ்ஷெய்க் அப்துல் கரீம் இப்றாகீம் இன்று வியாழக்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் அழைப்பின் பேரிலேயே அவர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது காத்தான்குடியில் நிர்மாணிக்கப்படும் மன்னர் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரி மற்றும் இஸ்லாமிய நூதனசாலை ஆகியவற்றின் நிர்மாண வேலைகளை சவூதி அரேபிய அமைச்சர் இதன்போது பார்வையிட்டார்.
உலமாக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள மன்னர் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரியின் கட்டுமாணப்பணிகள் என்பவற்றை பார்வையிட்டதுடன் இலங்கையில் முதற்தடவையாக நிர்மாணிக்கப்படவுள்ள இஸ்லாமிய மரபுரிமைகளைக் கொண்ட நூதனசாலை அமைக்கப்படவுள்ள இடத்தையும் பார்வையிட்டதோடு அது தொடர்பான கலந்துரையாடிலும் கலந்து கொண்டனர்.
எங்கேடா BBS?
ReplyDelete