Header Ads



சம்மாந்துறை தேசிய கல்லூரி சாம்பியன்


(வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் நடாத்திய கணித வினாடி வினாப்போட்டியில் சம்மாந்துறை வலயத்திலுள்ள சம்மாந்துறை முஸ்லிம் தேசிய கல்லூரி மாகாண சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்து சாதனை படைத்துள்ளது.

மேற்படி போட்டி திங்கட்கிழமை  திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லாரியில் நடைபெற்றது. அதில் மேற்படி பாடசாலையைச் சேர்ந்த அகமட் நுசாப் மற்றும்  ஹினாஸ்ஆகிய இரு மாணவர்கள் தங்கப்பதக்கங்களையும் செல்வி ஹன்சா மற்றும் அஸ்ஜத் அகமட் ஆகியோர் வெள்ளிப்பதக்கங்களையும்  ஆங்கிலமொழிமூலத்தில் செல்வி  சிவ்கா வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுச் சாதனைபடைத்துள்ளனர்.

இவர்களுக்கான விருதுகளை கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் கே.மனோகரன் வழங்கிவைத்தார்.

No comments

Powered by Blogger.