Header Ads



நான் கொலைகாரன் என்ற வாஸ் குணவர்தனவுக்கு பிணை

பம்பலப்பிட்டி முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட வழக்கில் வாஸ் குணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

நான் கொலைகாரன் தொடர்ந்தும் என்னை சிறையில் வைத்திருக்க உங்களுக்கு முடியாது. நான் விடுதலையாகி வந்ததன் பின்னர் உங்களுக்கு என்ன செய்யப்போகின்றேன் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள் என முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன குற்றப் புலனாய்வு பிரிவின் பதில் உத்தியோகத்தர் ஷானி அபேசேகர மற்றும் விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கடந்த ஜுன் மாதம் 10ஆம் திகதி அச்சுறுத்தல் விடுத்ததாக நீதிமன்றத்தில் கடந்த ஜுன் மாதம் 12ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அறிவிக்கப்பட்டது

இந்நிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது 10 இலட்சம் இரு தனிநபர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எனினும் பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான நபர் என்ற வகையில் அவர் தொடர்ந்தும் விளக்கமறியலி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. vi

1 comment:

  1. கொலைகார நாய்க்கும் ஒரு TIE

    ReplyDelete

Powered by Blogger.