Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு அநீதி..!

(சியாம்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அனுசரணையோடு ஒலுவில் பிரதேசத்தில்   சில தொழில் வாய்ப்புகளுக்காக குறிப்பிட்ட சில அரசியல் வாதிகளினால்  சென்ற ஒரு மாத காலத்துக்கு முன்பாக சிலரின்  பெயருடன் சேர்த்து தகவல்கள் அனுப்பபட்டன.

ஆனால் அதற்குள் முஸ்லிம்  காங்கிரசிக்காக பாடுபட்டவர்களின்  பெயர்கள் அல்லாமல் வேறு நபர்களின்  பெயர்கள் அனுப்ப பட்டுள்ளது  என்று முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள்  விசனம் தெரிவித்து உள்ளார்கள். பல வருடங்களாக கட்சிக்காக பாடுபட்ட எங்களை ஒரு நிமிடத்தில்  தொழில் வாய்ப்பில் சில அரசியல் வாதிகள்  மறந்து விட்டார்கள் என்று அவர்கள் மன வருத்தம் அடைவதாக கூறினார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் மட்டகுழுவுக்கும் தெரியபடுத்த இருப்பதாகவும்  அவர்கள்  மேலும் தெரிவித்தார்கள். தேர்தல் காலங்களில் இரவு பகல் என்று பாராமல் கட்சிக்காக  பாடுபட்ட அக்கட்சி  ஆதரவாளர்கள் அல்லாமல் வேறு நபர்களை அத்தொழில்வாய்ப்புக்கான பெயர் பட்டியலில் இணைத்தது வேதனைக்குரிய  விடயம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

1 comment:

  1. இதுதான் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் வியாபார அரசியல்.

    இலட்சங்களைக் கொட்டி வாக்குகளைப் பெற்றவர்கள், போராளிகள் என்பதற்காக "சும்மா" தர மாட்டார்கள்.

    கோடி கோடியாக உழைக்கும் நோக்குடன் மு.கா.வுக்குள் வந்தவர்கள் பிச்சையெடுக்கும் பனையோலைப் பெட்டியை வழங்குவதாயினும் ஆயிரம் ரூபா கொடுப்பவர்களுக்கே முன்னுரிமை அளிப்பார்கள்.

    இனியாவது புரிந்து கொள்ளுங்கள் போராளிகளே..!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.