Header Ads



வடமத்திய முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க காலமானார்

வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க இன்று 27-09-2013 காலமானார்.

பேர்டி பிரேமலால் திஸாநாயக்க 1954ம் ஆண்டு ஜூலை 15ம் திகதி பிறந்தார். கல்வி, விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கிய அவர், 1971ம் ஆண்டு தனது தந்தையின் மறைவை அடுத்து குடும்ப பொறுப்புக்களை ஏற்க வேண்டி ஏற்பட்டதால் கல்வியை இடைநிறுத்தினார்.

அதன்பின் ஒரு வர்த்தகராக அவர் தொழில்புரிந்து வந்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஹொரண செயலாளராக 1972ம் ஆண்டு அரசியலில் இணைந்தார். அதன்பின் தலாவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1989ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினரானார்.

பின்னர் 1999ம் ஆண்டு வட மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சரானார். அண்மையில் இடம்பெற்ற வட மத்திய மாகாண சபைத் தேர்தலிலும் இரண்டாவது அதி கூடிய விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெற்ற போதிலும் அவர் மாகாண முதலைமைச்சராக நியமிக்கப்படவில்லை.

அதற்குப் பகரமாக தேசியப்பட்டியல் எம்.பி.யாக நியமிக்கப்பட்டு அமைச்சராக நியமிக்கப்படுவார் என அரச உயர் மட்டத்தினரால் உறுதியளிக்கப்பட்ட போதிலும் ஒரு வருடம் கடந்த நிலையிலும் அந்நியமனம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.