ஒலுவில் துறைமுகத்தினுள் சட்டவிரோத வலைத்தொகுதிகள் கைப்பற்றல்
ஒலுவில் துறைமுகத்தினுள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 03 பன்னாட்டுப்படகில் இருந்து கடலில் மீன்பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட மற்றும் அனுமதிப்பத்திரம் பெறப்படாத சுமார் 3 வலைத்தொகுதிகளை அட்டாளைச்சேனை கடற்றொழில் பரிசோதகர் எம்.எஸ்.மனாசிர் சரீப் புதன்கிழமை (25.09.2013) கைப்பற்றியுள்ளார்.
கடற்றொழில் பரிசோதகர் தலைமையிலான அக்கரைப்பற்று பொலிசார், கடற்படையினர், கரையோர பாதுகாப்புப்படையினர் கொண்ட குழுவினர் ஒலுவில் கடற் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 03 வலைத் தொகுதிகளையுடைய சுமார் 30 இலட்சம் பெறுமதியான தடைசெய்யப்பட்டதும், அனுமதிப்பத்திரம் பெறப்படாததுமான வலைகளே கைப்பற்றப்பட்டுள்ளன.
மீன் பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட பேசின் சுருக்கு வலைகளை கொண்டு மீன்பிடிப்பதனால் கடல்வாழ் உயிரினங்கள் அழிவடைவதுடன், எதிர்கால சந்ததியினருக்கான கடல் வாழ் உயிரினங்கள் முற்றாக இல்லாமல் போவதற்குரிய சந்தர்ப்பங்களும் உருவாகிவருகின்றன. இதனால் எதிர்காலத்தில் தடைசெய்யப்பட்ட அல்லது அனுமதிப்பத்திரம் பெறப்படாத வலைகளை கொண்டு கடலில் மீன் பிடிப்பவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கைப்பற்றப்பட்ட வலைகளையும், படகில் இருந்த 2 நபர்களையும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை கடற்றொழில் பரிசோதகர் எம்.எஸ். மனாசிர் சரீப் தெரிவித்தார்.
Post a Comment