பௌத்த கொடி எங்கள் உரிமை - மகிந்த
இலங்கையில் காணப்படும், புராதன வரலாறு மற்றும் கலாச்சார சின்னங்களை அழிப்பதற்கு சர்வதேசத்திற்கு எந்த வகையிலும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த கருத்தினை தெரிவித்தார்.
சிலர் நாட்டுக்கு வந்து பௌத்த கொடியை அகற்றும்படி கூறுகிறார்கள். அது எங்கள் உரிமை. ஆனால் சிலர் சிலையை அகற்றும் படி கூறியது உண்மையா பொய்யா என்று கேட்கிறார்கள். ஆனால் பௌத்த கொடியை அகற்றும்படி கூறியது தொடர்பில் கேள்வி எழுப்ப அவர்க்கு தைரியம் இல்லை. அது எங்கள் உரிமை தொடர்பான பிரச்சனை. பௌத்த கொடியை அகற்றுமாறும், யாரோ ஒருவருடைய சிலையை அகற்றும்படி கூறினாலும், முதலாவதாக கொடியகற்றுவது குறித்தே கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். இது தொடர்பாக கேள்வி எழுப்பியவர், முதலில் பௌத்த கொடி குறித்து கேட்க மறந்து விட்டார். sfm
Post a Comment