Header Ads



அநியாயம்.. அநியாயம்..!!


(Mohamed Iflal)

 1. முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் மாத்திரமா?

புத்தளம் மாவட்டத்தில் 40%க்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்கள் வாக்காளர்களாக பதிந்திருக்கின்ற நிலையில், வெறுமனே ஒரேயொரு முஸ்லிம் பிரதிநிதியை முழுப் புத்தளம் மாவட்டமும் பெற்றிருப்பது, புத்தளம் முஸ்லிம் சமூகத்துக்கு பாரியதொரு அநியாயம் நிகழ்ந்திருப்பதற்கான அறிகுறியாகும்.

2. நேற்று இடம்பெற்ற அதிர்ச்சியளிக்கும் சம்பவம்!!!

நேற்றையத் தினம் (24.09.2013) புத்தளம் சென்.அன்றூஸ் மகா வித்தியாலத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் (சுமார் 5000) கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலனாவை புத்தள நகரத்தில் வாக்களிக்கப்பட்டவை எனவும், குறிப்பாக முஸ்லிம் மக்களது வாக்குச் சீட்டுகள்தான் என்றும் அறிய முடிகின்றது.

3. இன்றைய களநிலவரம்:

கண்டுபிடிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
"முழு புத்தளம் மாவட்டம் பூராகவும், தேர்தல் மீண்டும் நடத்தப்பட வேண்டும்" என்று கோரி ஜனசெத பெரமுனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களும் புத்தளம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டமொன்றை நிகழ்த்தி வருகின்றார்கள். இந்நிலையில் புத்தளம் நீதிமன்றம், மாவட்டசெயலகத்திற்கு முன்னால் போலீஸ் மற்றும் விஷேட அதிரடி படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

4. எமக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பம்!!!

நீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரம் புத்தளம் மாவட்டத்தில் மீள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

5 .நாம் செய்ய வேண்டியது?

இடம்பெற்றிருக்கும் இந்த அநீதியானது ஆளும் கட்சியில், எதிர்கட்சிகளில், சிறுபான்மை கட்சிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்குறியது மாத்திரமல்ல; முழு புத்தளம் முஸ்லிம் சமூகத்துக்குமானது என்பதை சமூகத்து எடுத்து கூற வேண்டும்...

எமது அரசியல் பிரதிநிதித்துவம், எமது உரிமை களவாடப்பட்டுள்ளது என்பதை புத்தளம் முஸ்லிம் சமூகம் உணர வேண்டும்...

இதுவரையும் மௌனித்திருந்தது போதும், இழந்தவற்றை மீட்டெடுக்கும் போராட்டத்தை எமது அரசியல், சமூக மற்றும் மார்க்க தலைமைகள் முன்னெடுக்க வேண்டும். எமது சமூகம் இன்றே அணித்திரள வேண்டும். ஏமாற்றப்பட்ட புத்தளம் முஸ்லிம் சமூகத்துக்கு, வாக்காளர்களுக்கு மற்றும் வேட்பாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
------------------------------------------------------
எங்கே நான் அளித்த வாக்கு?

நாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தோம்...
நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தோம்...
நாங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்தோம்...

எங்கே எமது பிரதிநிதிகள்?

புத்தளம்
எமக்கு நீதி வேண்டும்.
------------------------------------------------------
||| உதித்தெழுகின்றோம் சமூகத்துக்காக |||

2 comments:

  1. Jezakallahu khair, Jaffna Muslim.

    ReplyDelete
  2. இந்தப் பிரச்சினையை கட்சி வேறுபாடுகளுக்கப்பால் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ள வேண்டும்.

    இந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளின் உச்சக்கட்டமே முஸ்லிம் சமூகத்தின் வாக்குரிமையை குப்பையில் வீசியெறிந்துள்ள சம்பவமாகும்.

    முஸ்லிம் சமூகத்திற்காகக் குரல் கொடுக்கின்ற ஸ்ரீ.ல.மு.கா, அ.இ.ம.கா, தே.கா, அமைச்சரவையிலுள்ள ஆளுந்தரப்பு முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஆஸாத் சாலி, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அத்தனை பேரும் புத்தளம் மாவட்டத்தில் மீள் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்று ஒருமித்த குரலில் அரசுக்கும், நீதியமைச்சுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    'அநியாயம் இழைக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனை இறைவனிடம் திரைகள் எதுவுமின்றி ஏற்றுக் கொள்ளப்படும்' என்பதனை ஒவ்வொரு கலிமாச் சொன்ன முஸ்லிம்களும் இந்த விடயத்தில் அவரவர் சார்ந்துள்ள கட்சித் தலைவர்களுக்கு உடனடியாக எடுத்துக் கூற வேண்டும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.