Header Ads



தம்புள்ள பள்ளிவாசலுக்காக குரல் கொடுத்த அமைச்சரின் மகனுக்கு ஆகக்கூடிய விருப்பு வாக்கு

(tm) மத்திய மாகாண சபை தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட காணி மற்றும் காணி மறுசீரமைப்பு அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் மகன் பி.வி.தென்னகொன் ஆகக் கூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக பி.வி.தென்னகொன் 51,591 விருப்பு வாக்குகளையும் பந்துல யலேகம 45,460 விருப்பு வாக்குகளையும் பராக்ரம திசாநாயக்க 24,686 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ரஞ்சித் அலுவிகார, 29,545 விருப்பு வாக்குகளையும் சஞ்சீவ கவிரத்ன 24,249 விருப்பு வாக்குளையும் ரொகான் பண்டாரநாயக்க 14,415 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.