சமூக நலனை கருத்திற்கொண்டு ஆஜரான சட்டத்தரனிகளுக்கு நன்றி
புல்மோட்டை பிரதேச காணி விடயமாக இன்று 2013.09.18 ம் திகதி வழக்கு மீண்டும் குச்சவெளி நீதிவான் நீதிமன்றில் சசிதரன் முன் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ஆஜரான நபர்கள் சார்பாக அணைத்து சட்டத்தரணிகளும் எழுந்து தங்களது நியாயங்களை முன்வைத்தனர்.
அப்போது பூஜாபூமி,தொல்பொருள் என்ற போர்வையில் காணிகளை அளவையிடுவதற்கான கட்டளையை பொலிஸார் நீதிமன்றத்திடம்; கோரியபோது அவை மறுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்காத காரணத்தால் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 2013.10.02ம் திகதி குச்சவெளி நீதிமன்றத்துக்கு ஆஜராகுமாறும் இடைப்பட்ட காலப்பகுதியில் எந்த அளவைகளும் ஆதாரங்கள் சமர்ப்பிக்காமல் அளவைக்கான அனுமதியை வழங்க முடியாது என்றும் நீதவானால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி இந்நடவடிக்கையானது புல்மோட்டை பிரதேச பூர்வீக காணிகள் சுமார் 2500 ஏக்கர் காணிகளை பாதுகாக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாகும் எனவும் புல்மோட்டைப் பிரதேசத்தில் நில அளவையாளர்களால் பூஜாபூமி,தொல்பொருள் என்ற போர்வையில் அளவையிட ஆரம்பித்த முதல் காணி அனுமதிப்பத்திர காணியென்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று இப்பிரச்சினை தொடர்பாக எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சமூக நலனை கருத்திற்கொண்டு ஆஜரான சட்டத்தரனிகள் அணைவருக்கும் புல்மோட்டைப்பிரதேச மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். என்று. மா.சபை. உறுப்பினர் அன்வர் தெரிவித்தார்.
Post a Comment