அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான நிகழ்வு
உங்களது இரத்தத் துளிகளால் உயிர்களைக் காப்பாற்றுங்கள் - அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை ஊழியர் நலன் புரிச்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான நிகழ்வு நாளை 26.09.2013 வியாழக்கிழமை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி வளாகத்தில் இடம் பெற உள்ளது. இதில் வைத்தியசாலை ஊழியர்கள், நலன் புரிச்சங்க அங்கத்தவர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு இரத்த நன்கொடை வழங்க உள்ளனர்.
இந்நிகழ்வில் இரத்ததானம் செய்ய விரும்பும் 18-60 வயதுக்குற்பட்ட, 50கிலே கிராமுக்கு மேற்பட்டர்கள் கலந்து கொண்டு தங்களது இரத்தத்தினை வழங்கி எமது மக்களுக்கு உதவுங்கள்.
'வாழ்ந்தவன் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிலைப்பவர் என்றும் மற்றவர் உயிரைக் காப்பவர் மட்டுமே'
Post a Comment