Header Ads



பங்காளதேஷின் ஜமாஅதே இஸ்லாமிக் கட்சித் தலைவருக்கு மரண தண்டனை

பங்காளதேஷின் எதிர்க் கட்சித் தலைவர் (ஜமாஅதே இஸ்லாமிக்) அப்துல் காதிர் மொல்லாவிற்கு அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த யுத்தத்தின் போது கலவரங்களை தூண்டியமை, கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. இந்த வழக்கை சென்ற பெப்ரவரி மாதம் விசாரணை செய்த விசேட ரையல் நீதிமன்றம் இவருக்கெதிராக ஆயுள் தண்டனை தீர்ப்பு விதித்தது. யுத்த குற்றங்களுக்கு அதிகபட்சமாக தூக்குத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டுமென மதச்சார்பற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் ஜமாஅதே இஸ்லாமியின் தலைவர் அப்துல் காதர் மொல்லாவை தூக்கிலிட ஆயிரக்கணக்கான மதச் சார்பற்றோர் தலைநகர் டாக்காடவில் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். இதன் பின்னர் விசேட ரையல் நீதிமன்றத்தின் தீர்ப்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் இவரை குற்றவாளியாக கண்டு அவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது. விசேட ரையல் நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு மேலாக ஒருநாட்டின் உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தமை தெற்காசிய நாடுகளின் வரலாற்றில் முதல் முறையாக பங்களாதேஷிலே இடம்பெற்றுள்ளது.

ஜமாஅதே இஸ்லாமி பங்களாதேஷின் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்று. இதன் நான்காவது உயர் மட்ட தலைவராக அப்துல் காதர் (65) மொல்லா பதவி ஏற்றிருந்தார்.

பங்களாதேஷின் பிரதான அரசியல் வாதிகளில் ஒருவரான இவர் நாட்டின் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்ட முதலாவது அரசியல் தலைவராவார். இத்தீர்ப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் இன்று தலைநகர் டாக்கா உட்பட பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். இவருக்கெதிரான அனைத்துக் குற்றச்சாட்டிலிருந்தும் அப்துல் காதர் மொல்லாவை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் ஐந்து மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. எனினும் இவை அனைத்தும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

1971 ஆம் ஆண்டு நடந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் யுத்தத்தில் மூன்று இலட்சம் பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச குற்றவியல் சபை கூறுகிறது. ஆனால் மூன்று மில்லியன் பேர் இறந்ததகாவும் 2,50000 பெண்கள் கற்பழிக்கப்பட்டதாகவும் பங்களாதேஷ் அரசு கூறுகிறது.
s

No comments

Powered by Blogger.