Header Ads



பள்ளிவாசல்களிலும் அரசாங்கம் தனது அதிகாரத்தை பரப்பியுள்ளது - விக்ரமபாகு கருணாரட்ன

இலங்கையில் பௌத்த படையணி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  பொதுபலசேனா, இராவணா பலய போன்ற அமைப்புகள் ஒரு நாள் ஜனாதிபதியின் வீர பௌத்த சியாம் மா நிக்காய பௌத்த பீடத்தையும் தாக்கக் கூடும் என்று நவ சமசமாஜா கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

பொதுபல சேனாவை சரியாக குறிப்பிட வேண்டுமானால் பலு சேனா (நாய் படை) என்றே குறிப்பிட வேண்டும். இராவணா சேனாவை வானர சேனை என்றே குறிப்பிட வேண்டும்.

ஒரு நாள் இவர்கள் ஜனாதிபதியின் வீர பௌத்த சியாம் மா நிக்காய பௌத்த பீடத்தையும் தாக்கக் கூடும் என்றார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் உரிமைகளுக்காக கொலை செய்த பிரபாகரனை பிள்ளை பிடிப்பவர் என்று அடையாளப்படுத்தி, தமது மக்களின் விடுதலைக்காக வெள்ளையர்களை கொலை செய்த நெல்சன் மண்டேலாவை வீரர் என்று கூறிய நவநீதம்பிள்ளை தொடர்பில் எனக்கு நல்லபிப்பிராயம் இல்லை

நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வந்து திரும்பிச் செல்லும் போது நாட்டின் அனைத்து துறைகளிலும் சர்வாதிகாரம் பரவியுள்ளதாக கூறினார். அவர் அப்படி கூறி விட்டு சென்ற பின்னர் அரசாங்கம் பிடல் காஸ்ரே மற்றும் சாவவேஸ் போன்று ஏகாதிபத்திய விரோத கதைகளை கூறுகிறது.

நவநீதம்பிள்ளை மணமகளை வீட்டுக்கு சென்ற பார்த்து விட்டு வருவது போல் இலங்கைக்கு வந்து சென்றார். நாடு நன்றாக இருக்கின்றதா என்று கேட்டால் நன்றாக இருக்கின்றது என்றார். ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இதனிடையில் அரசாங்கம் இலங்கையில் பள்ளிவாசல்கள், விகாரைகள் உட்பட சகல இடங்களிலும் தனது அதிகாரத்தை பரப்பியுள்ளது. நாங்கள் தேர்தல் நடத்துகிறோம் அதனால் நாங்கள் சர்வாதிகாரிகள் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

ஹிட்லரும் தேர்தல் நடத்தினார். தனது சக்திகளை நாட்டின் அனைத்து துறைகளிலும் நுழைத்து மதவாத, இனவாத ஜெர்மனிய படையை ஏற்படுத்தினார். அது போல் இலங்கையில் பௌத்த படையணி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

1 comment:

  1. நல்ல பேச்சு. இந்த மனிசன் எப்போதும் நடு நிலையாக பேசுவார். உண்மையை சொல்லுவார். நவனீதம்பிள்ளை உண்மையில் அப்படித்தான் மாமியார் வீட்டுக்கு வருவதைபோலதான் வந்து பார்துவிட்டு போயுள்ளார், இவரின் வருகையால் வழிமேல் விழிவைத்து காத்திருந்த அப்பாவி பொது மக்களுக்கும் என்னதான் பிரயோசனமோ தெறியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.