மில்ஹான் லதீபின் தலமையில் வடமாகாண அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடல்
(எம். எச். ஹஸீன்)
மன்னார்
மாவட்டத்தில் அரசின் நேரடித் தெரிவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்னனி
சார்பாக போட்டியிடும் அல்ஹாஜ் மில்ஹான் லதிபின் தலமையில் வடமாகாண
அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடல்.
அண்மையில் புத்தளம் நாகவில்லில் அமைந்துள்ள அல் ஹாஜ் மில்ஹான் லதிபின் வீட்டில் மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றது இதில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, அமைச்சர் பௌசி மற்றும் புத்தளம் நகர சபை பிதா பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றியும் அவர்களது கல்வி நிலை பற்றியும் முக்கிய கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டது அத்தோடு தற்போது புத்தளத்தில் இடம்பெயர்ந்து வசிக்கின்ற முஸ்லிம்களின் நிலைபற்றியும், இதில் தற்போது வசிக்கின்ற கிராமங்களான கற்பிட்டி தொடக்கம் பாலவி வரையும் மற்றும் புளிச்சாக்குளம் தொடக்கம் எலுவன்குளம் வரை வசிக்கின்ற இடம்பெயர்ந்த கிராமங்களின் பிரச்சனைகளைப் பற்றி பசில் ராஜபக்ஸ அல்ஹாஜ் மில்ஹான் லதிப் மூலமாக கேட்டறிந்து கொண்டார். அதன் போது ஹுஸைனியாபுரத்தின் பிரதான பாதை கவனத்தில் எடுக்கப்பட்டதோடு அதற்கான நிதியும் ஒதிக்கீடு செய்யப்பட்டது இதில் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும், 1000க்கும் மேற்பட்ட பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment